1. இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. குட்லக் ராஜேந்திரன் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டதால் இன்று முதல் இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்.

அவருக்குப் பதிலாக இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக ஆர்.எஸ். மங்கலம் திரு. எம். தெய்வேந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்.

2. விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த திரு. எஸ். வேலாயுதம் கட்சியிலிருந்து விலகி விட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் விதத்தில் செயல்பட்டுள்ளதாலும் விருதுநகர் மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

அவருக்கு பதிலாக விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளராக திரு. ஸ்ரீராஜா சொக்கர் நியமிக்கப்படுகிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள், துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் திரு. முகுல் வாஸ்னிக் ஆகியோரின் ஒப்புதலோடு மேற்கண்ட இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *