தேசிய பாதுகாப்பு விவகாரங்களில், எதிர்கட்சியின் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் என்று, இந்திய தேசிய காங்கிரஸ் பா.ஜ.க. அரசை, கடந்த மூன்று ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. சமீபத்திய, பூடான் பகுதியில் நடந்துகொண்டிருக்கும், இந்திய-சீனா எல்லைத் தகராறு, ஆபத்தான கவலை தரும் சம்பவங்களையும், விபரீத விளைவுகளையும் நாட்டின் பாதுகாப்பிற்கு உண்டாக்கும் என்பதனால், ஜூன் மாதம் 30ம் தேதி அன்றும் நாங்கள் வலியுறுத்தினோம்.
இந்திய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சனைகளை, அகில இந்தியாவும் அவற்றினை ஒரே முகமாக இணைந்து, எதிர் கொள்ளவேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது. தேசிய நலன்களை பாதுகாப்பதில், அரசின் ஒவ்வொரு முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம். கடந்த 10 ஆண்டுகால UPA ஆட்சியில், இதுபோன்று ஒவ்வொரு பிரச்சினையும், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விளக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக செயல்பட்டது. எங்களது கோரிக்கையை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது தான் அரசு விழித்துக்கொண்டு தேசம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது குறித்தும், சமீப கால பிரச்சனைகள் குறித்தும் எதிர்கட்ச்சிகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம், அரசிற்கு வந்ததுள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாகும். அரசு சர்வகட்ச்சிக்கூட்டத்தையும் கூட்டியிருக்கிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும். அரசிடம், இந்திய-சீனா பிரச்சினையின் பின்னணி பற்றிய முழு விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்போம். அதுமட்டுமின்றி , பூட்டான் எல்லையில் தொடர்ந்துவரும் எல்லைத் தகராறினை பற்றியும் விசாரிப்போம். இதனால், நமது தேசிய பாதுகாப்பு அமைப்புகளின் மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்களை பற்றியும், நமது தேச நலன்களை பாதுகாப்பதற்காக , மேற்கொண்டிருக்கும் தகுந்த தேவையான நடவடிக்கைகளை பற்றியும் கேள்வி எழுப்புவோம்.
தேவைபட்டால், கூட்டம் முடிந்தபிறகு, காங்கிரஸ் தலைவர்களிடம் விவாதித்து, அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை வெளியிடுவோம்.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு:
சில்லறை வணிகத்தில், நேரடி முதலீடு செய்வதற்குரிய நிபந்தனைகளை தளர்த்திடும், ஒற்றை பிராண்ட் கொண்ட பொருட்களுக்கான அந்நிய முதலீடு செய்யும் முறையை, நேரடியாகவே செய்வதற்குரிய வழிவகைகளை ஏற்ப்படுத்திடவும், அரசு முயன்று வருகிறது என்ற செய்தி பரவி வந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் , இந்தியாவின் வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கையை பற்றி பரிசீலனை செய்திட பிரதமர் மோடி தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்போகிறது.
மொத்தவணிகம், சில்லறை வணிகம், சிறு தொழில்களை. இந்திய உற்பத்தியாளர்கள் ஆகிய எதையும் பாதிக்காத அளவில், பல-பிராண்ட் கொண்ட பொருட்களின் சில்லறை வணிகத்தில் இந்திய முதலீடு 51% அளவிற்கு அனுமதி கொடுத்தது உட்பட, பொருளாதாரத்தை விரிவாக்கும், பல தொடர் முயற்ச்சிகளை, UPA அரசு மேற்கொண்டது என்பதை, காங்கிரஸ் கட்சி இப்பொழுது நினைவூட்டிட நினைக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், அவரது பா.ஜ.க.வினருக்கும், “நீங்கள் தான் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து வந்தீர்கள்” என்பதையும் நினைவூட்ட விரும்புகிறோம்.
2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ம் தேதி,
“இது சிறு வியாபாரக் கடைக்காரர்களை, நாட்டிலுள்ள உற்பத்தியாளர்களை பாதிக்கும், வேலையில்லாதிண்டாட்டத்தை உருவாக்கிடும்” என்று சில்லறை வணிகத்தில் அந்நிய மோதலீட்டினை முழமையாக எதிர்த்திக்கும் போது பிரதமர் மோடி கூறினார். “வெளிநாட்டில் உற்பத்தியாகும், மலிவு விலை பொருட்களை நம் நாட்டில் கொண்டுவந்து குவித்துவிடுவார்கள்” என்று குறை கூறினார்.

2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி பல பிராண்ட் உள்ள பொருட்களின் சில்லறை வணிகத்தில் 51% அந்நிய முதலீடு கூடாது என்று மக்களவையில். பா.ஜ.க. ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. அது அப்போது தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
2013ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி பா.ஜ.க.வை சேர்ந்த அன்றைய எதிர்க்கட்சி தலைவரும் இன்றைய நிதியமைச்சருமான திரு.அருண் ஜெட்லி அவர்கள் “பா.ஜ.க. தனது கடைசி மூச்சு இருக்கும் வரை சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்பதை எதிர்த்து போராடும்” என கூறினார்.
முதலீடுகள் பற்றி பாஜகவினர் நிறைய பேசினார்கள். ஆனால் கடந்த மூன்றாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் மிகவும் குறைந்த அளவே முதலீடுகள் வந்துள்ளன. 2015 ம் ஆண்டிலிருந்து பல பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 71 அந்நிய முதலீடுகள் அரசின் முடிவிற்காக காத்திருக்கின்றன. இந்த அரசுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவதில் பல இடைஞ்சல்கள் தடைகள் உள்ளன என்பதை பற்றி, பல செய்திகள் பக்கம் பக்கமாக விளக்குகின்றன. உண்மையில், எதிர்க்கட்சியாக நாங்கள் தரக்கூடிய செய்தி இது தான். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவில் அந்நிய முதலீடு படுபாதாளத்திற்கு போய்விட்டது.
இனியாவது பிரதமர் வாய்ஜாலங்கள் செய்வதை நிறுத்திவிட்டு, இந்தியாவில் முதலீடுகள் செய்வதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கிடுவார் என்று நம்புவோம்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *