President

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் என பல்வேறு மாவட்டங்களில் 2000 ஏக்கர் நிலத்தில் கிரானைட் குவாரி அமைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை கொள்ளையடித்த பி.ஆர்.பி. நிறுவனத்தின் மீது இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சகாயம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் ரூ.16 ஆயிரத்து 338 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கின் மூலமாக சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால் விசாரணை நடத்தப்படுவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்காமல் பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருவதோடு, சகாயத்திற்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து ந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கிரானைட் கொள்ளைக் குறித்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சகாயம் சமர்ப்பிக்க இருக்கிறார்.

இந்நிலையில் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிற வகையில் பி.ஆர்.பழனிச்சாமியின் குவாரியில் வியாபார பெருக்கத்திற்காக 14 மனநோயாளிகள் நரபலி கொடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. நரபலி கொடுக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட மயானத்தில் புதைக்கப்பட்டதை பார்த்ததாக பழனிச்சாமியிடம் ஓட்டுநராக பணியாற்றிய சேவற்கொடியோன் விசாரணை அதிகாரி சகாயத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நரபலி சம்பவங்கள் 1999 முதல் 2003 வரை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 2011 ஆம் ஆண்டிலிருந்தே இதுகுறித்து சேவற்கொடியோன் புகார் தெரிவிக்க காவல்துறையிடம் முயன்றபோது மிரட்டப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இந்தப் பின்னணியில் சேவற்கொடியோன் கொடுத்த புகாரின் அடிப்படையில் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டும் பணியை உடனடியாக மேற்கொள்ளுமாறு காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு சகாயம் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்த காரணத்தால் இரவு முழுவதும் மயானத்திலேயே ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உறங்கி, புதைக்கப்பட்ட சடலங்களை பாதுகாக்க வேண்டிய அவலம் ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றிருக்கிறது. இதற்குப் பிறகுதான் காவல்துறையினரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் சடலத்தை தோண்டி எடுக்கிற முயற்சியில் ஈடுபட்டு நான்கு சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைக்கு பிறகுதான் நரபலி செய்து புதைக்கப்பட்டதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இத்தகைய கொடூரமான நரபலி கொடுமைகள் நிகழ்த்தப்பட்டதை விசாரிக்கப்பட வேண்டிய பொறுப்பு காவல்துறையினருக்கு இருக்கிறது. ஆனால் காவல்துறையினரோ இவற்றையெல்லாம் மூடிமறைத்து பி.ஆர். பழனிச்சாமிக்கு பாதுகாவலனாக செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த 1999 முதல் 2003 வரை நடைபெற்றதாக கூறப்படுகிற 14 நரபலிகள் குறித்து ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை ? 2011 முதல் புகார் தெரிவிக்க முயன்ற சேவற்கொடியோனை அச்சுறுத்தி மிரட்டியது ஏன் ? இதன்மூலம் யாரை பாதுகாக்க ஜெயலலிதா அரசு முயல்கிறது ?

இந்நிலையில் நியாயமான விசாரணை நடைபெறும் என்கிற நம்பிக்கை விசாரணை அதிகாரி சகாயத்திற்கோ, மற்றவர்களுக்கோ இல்லை. இந்நிலையில் பாரபட்சமற்ற விசாரணi மேற்கொள்ள மத்திய புலனாய்வுத்துறையின் (CBI) கட்டுப்பாட்டில் சிறப்பு விசாரணைக் குழுவை (Special Investigation Team – SIT) அமைத்து உடனடியாக உண்மையை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆனால், தோண்டி எடுக்கப்பட்ட ஒரு பச்சிளம் குழந்தை உள்ளிட்ட 4 சடலங்களின் எலும்புகள் குறித்து தமிழக அரசின் பொது மருத்துவமனை மூலமாக தடயஅறிவியல் பரிசோதனையை மேற்கொண்டால் உண்மையை அறிய முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குரியாகும். எனவே, எலும்புக்கூடுகளை அண்டை மாநிலங்களான ஐதராபாத், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு அனுப்பி தடயஅறிவியல் சோதனையை மேற்கொள்வதன் மூலமாகவே உண்மை நிலையை நாம் அறிந்து கொள்ள முடியும். இதுகுறித்து தமிழக அரசு முடிவெடுக்க தவறினால் உயர்நீதிமன்றம் தலையிட்டு உரிய ஆணையை வழங்க வேண்டும்.

எனவே, அனைத்து விவரங்களும் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கிற வகையில் இது குறித்து வெள்ளை அறிக்கையை சகாயம் குழுவின் மூலமாக வெளிப்படுத்த வேண்டும். இதற்கு தமிழக அரசு ஒத்துழைக்க மறுத்தால் நீதிமன்றம் தலையிட்டு உண்மையை உலகிற்கு உணர்த்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *