இதுவரை யாருமே அண்ணல் அம்பேத்கருக்கும், பண்டித நேருவிற்கும் இடையே இருந்த நட்புணர்வை வெளிக்கொணரவில்லை என்பது விந்தையாக உள்ளது. மூடி மறைக்கப்பட்டு வந்துள்ளது. இதுபற்றி எந்த புத்தகம் இதுவரை வெளிவந்ததில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, ‘பண்டிட்ஜிக்கும், அம்பேத்கருக்கும் இடையே உள்ள உறவு நன்றாக  இருந்தது இல்லை. அதனால்தான் அண்ணல் அம்பேத்கர், நேருவின்  மந்திரிசபையிலிருந்து விலகினார்’ என்று பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர் ஆர்எஸ்எஸ், சங் பரிவாரங்கள். இது உண்மைக்கு புறம்பானது.

அரசியலமைப்பு சட்டத்தின் வரைவுக்குழுவிற்கு அண்ணல் அம்பேத்கர் தான் தலைமையேற்றிருந்தார் என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், இந்து மதச்சட்டக் கோட்பாடுகளின் சீர்திருத்தம் கொண்டு வர, அவர் மிகவும் பாடுபட்டார் என்ற உண்மை சரியாகப் பரப்பப்படவில்லை.

திரு.பி.என்.ராவ் (இவர் அரசியல் சட்ட அமைப்பு வரைவுக்குழுவின் செயலாளராகப் பணியாற்றியவர்) தயாரித்து வைத்திருந்த வரைவுநகலை, அடிப்படையாக வைத்து இந்து சட்டத்திலுள்ள விதிகளுக்கு புதிய புரிதல்களையும், புதிய மரபுகளையும் உருவாக்கி ஒருங்கிணைத்து தந்தவர், அன்றைய நேரு அமைச்சரவையில், சட்ட அமைச்சர்களாக இருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள். இம்மாதிரி இந்துச்சட்டங்களுக்கு, புதுவடிவம் அமைத்து கொடுத்ததால், சாதிப்பிரிவுகள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்தனƒ பெண்களுக்கு உரிய உரிமைகளும் மேலோங்கிக் காணப்பட்டது.

இவை புரட்சிக்கரமான சீர்த்திருத்தங்களாகும். எனவே, தீவிர ‘இந்துத்துவா’ வாதிகள் இதை எதிர்த்து போரிட்டனர். அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு எதிராகப் போராட்டம் செய்தவர்களின் பின்னணியில் இருந்தது ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் தான் என்பதை சொல்லவும் வேண்டுமா?

1949 ஆம் வருடம் மட்டுமே, டெல்லியில் இம்மாறுதல்களை எதிர்த்து ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் 79 கூட்டங்களை நடத்தினர். இந்துமதக் கலாச்சாரத்தையும், மரபுகளையும் டாக்டர் அம்பேத்கரும், நேருவும் குழிதோண்டி புதைத்துவிட்டனர் எனக்குறை கூறி, அவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டனர். அம்பேத்கர் மற்றும் நேருவின் கொடும்பாவிகளையும் எரித்தனர். அந்த அளவிற்கு இந்த இருவரையும் ஆர்எஸ்எஸ் காரர்கள் வெறுத்தனர்.

ஆனால், வேடிக்கை என்னவென்றால், இதே ‘இந்துத்துவா சக்திகள் இன்று அம்பேத்கரின் பாரம்பர்யத்தை தங்களை தாக்கிக் கொள்ள விளைகின்றனர். அம்பேத்கர் இந்துமதத்தை எதிர்த்தவரல்ல என்று அப்பட்டமாக பொய் கூறிவருகின்றன’ – இது தான் காலத்தின் கோலம்.

1950, 1951 ஆம் ஆண்டுகளில், இந்து மறுமலர்ச்சி சட்டத்தை, தேசிய சட்டசபையில் (கவனிக்கவும், அன்று மத்தியில் பாராளுமன்றம் கிடையாது). நிறைவேற்றிட பிரதமர் நேரு, மிகவும் முனைந்தார். ஆனால், தேசிய சட்டசபையில், இதற்கு எதிர்ப்பு வலுவாக இருந்ததால், இச்சட்டத்தை நேரு கைவிட வேண்டியதாயிற்று. அன்று காங்கிரஸிலிருந்த பிரபலமான தலைவர்களே இச்சட்டத்தை எதிர்த்தனர்.

இச்சட்டத்திற்கு போதுமான ஆதரவைப் பெற பிரதமர் நேரு தவறிவிட்டார். அதற்கான முழுமுனைப்பையும், சிரத்தையையும் அவர் காட்டவில்லை எனக் கூறி அம்பேத்கர், நேருவின் மந்திரி சபையிலிருந்து விலகினார்.

ஆனால், தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தார், பண்டித நேரு, 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், மக்கள் அவருக்கு பெரும் ஆதரவை அளித்தனா. இந்து மதச் சீர்திருத்தத்தை மக்கள் முன்வந்து, அவர் பிரசாரம் செய்தார். அலகாபாத் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, இந்து மகாசபையைச் சேர்ந்த ‘பிரம்மசாரி’ சாமியார், நேருவையும், அம்பேத்காரையும் தாக்கி கடுமையாக பிரசாரம் செய்தார் இறுதியில், நேரு பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரம்மச்சாரி சாமியாரைத் தோற்கடித்தார்.

மக்களின் அமோக ஆதரவைப் பெற்றபின், பிரதமர் நேரு இந்து மதச்சீர்திருத்ததிற்கு தேவையான ஆதரவு பெற்றிட வெகுவாக முனைந்தார். இச்சட்டத்தை ஆதரித்து பாராளுமன்றத்தில் ஆணித்தரமான வாதங்களை வைத்தார் காங்கிரஸ் உறுப்பினர்களின் முழுச் சம்மதத்தையும் பெற்றார்.

1955, 1956ம் ஆண்டுகளை, இச்சீர்த்திருத்தங்களை தனித்தனிச் சட்டமாகச் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் காட்டினார். பாபாசாஹிப் டாக்டர் அம்பேத்காரும், தனது கனவுகள் நனவாகி வருவதை தன் கண்முன்னாலேயே கண்டார். ஆனந்தம் கொண்டார். அந்த மகிழ்ச்சியிலேயே கண்மூடினார். அண்ணல் அம்பேத்காரின் நினைவாஞ்சலி பாராளுமன்றத்தில் நடைபெற்றபோது பண்டித நேரு ‘இந்து மதத்திலுள்ள பல பிற்போக்கு எண்ணங்களே எதிர்த்துப் போராடிய புரட்சிச் சின்னமாக டாக்டர் அம்பேத்கார் கருதப்படுகிறார். இந்து மதச் சட்டங்களில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதற்காக அவர் காட்டிய முனைப்பும், அதற்காக அவர் எதிர்கொண்ட சிரமங்களும், கஷ்டங்களும் என்றென்றும் நினைவில் நிற்பவை. அவரது வாழ்நாளிலேயே, அவர் எதிர்பார்த்த சீர்திருத்தங்கள், அவர்கள் முன்னாலேயே நிறைவேற்றியதையே நம் அண்ணலுக்கு அளித்திட்ட உண்மையான காணிக்கையாகும். என உணர்ச்சி பொங்க, பாபாசாஹிப் டாக்டர் அம்பேத்காருக்கு புகழாரம் சூட்டினார். ஓர் உயர்ந்த உள்ளம் அளித்த தகுதியான புகழுரையாகும் இது.

இன்று, அன்னை சோனியாகாந்தியும், தலைவர் ராகுல்காந்தியும், அவ்விரு உள்ளங்களின் பாரம்பர்யத்தைத் தூக்கி பிடிக்கின்றனர்.

வாழ்க அன்னை சோனியா காந்தி

வாழ்க இளம் தலைவர் ராகுல்காந்தி

ஜெய் ஹிந்த்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *