ஆவின் பாலில்  தண்ணீர் கலந்து மோசடி செய்ததில்  சாதனை படைத்த அ.தி.மு.க. ஆட்சியில், நெல்லில் மண்ணைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி சமீபத்தில் அரங்கேற்றியுள்ளது. சிவகங்கை  மாவட்டத்தில் தனியார் செங்கல்  சேம்பரிலிருந்து 650 கலப்பட நெல் மூட்டைகளையும், லாரியையும் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக  அ.தி.மு.க.வினர் மூன்றுபேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஈடுபட்ட அ.தி.மு.க. வியாபாரிகள் இரண்டுபேரை  போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த மோசடியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. வியாபாரிகள் ஜேம்ஸ், சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் தொடர்ந்து ஈடுபட்டு  வந்துள்ளனர். ஒவ்வொரு நெல் மூட்டையிலும் 5 கிலோ சவுடு  மண் சேர்த்துள்ளனர். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் புகார் வந்ததன் அடிப்படையில், 31.03.2015  அன்று கைது செய்யப்பட்டனர்.

நெல்லில் மண்ணைக் கலந்து  மோசடி செய்து கொள்ளை லாபம் அடிப்பதில் அ.தி.மு.க.வினரோடு  அதிகாரிகளும் கூட்டுசேர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமான சணல் சாக்குகளில் கொள்முதல்  செய்யப்பட்ட நெல்லோடு மண்ணையும் கலந்து அனுப்பிவிடுவதைக்  கடந்த சில வருடங்களாகச் செய்து வந்துள்ளனர்.

இந்த   மோசடியில் அ.தி.மு.க. வியாபாரிகள், அதிகாரிகள்  ஆகியோருக்குப் பின்பலமாகச் செயல்பட்ட விவசாயத்துறை அமைச்சரின் பங்கு  குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *