தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறைக்குப்  போட்டியாகச் செயல்பட்டு நஷ்டத்தை உண்டாக்குவதற்காகவே படுஜோராகச் செயல்படுவது,  ‘ஆம்னி பஸ்’ போக்குவரத்து. பயனாளிகளுக்குப் பல்வேறு தொல்லைகளைத்  தருகிற நிறுவனமாக அரசுப் போக்குவரத்துத் துறை மாறிவிட்டதால், வசதிவாய்ப்புள்ள மக்கள் ஆம்னி பஸ்களை நாடிச் செல்கின்றனர்.

தமிழக ஆட்சியாளர்களும் ஆம்னி  பஸ் துறையைப் பணம் கொழிக்கும் துறையாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 1000 ஆம்னி பஸ்கள் ஓடுகின்றன. அனைத்தும் ஒப்பந்த ஊர்திகளாகவே ஓடுகின்றன. எதற்கும் நிரந்தர பர்மிட் கிடையாது. அனைத்து ஆம்னி பஸ்களும் ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு குறிப்பிட்ட  இடத்தில் பயணிகளை ஏற்றி, குறிப்பிட்ட இடத்தில் இறக்குவதற்குத்தான் அந்த  பர்மிட் வழங்கப்படுகிறது. இந்த   பர்மிட்டை வைத்துக்கொண்டு ஆம்னி பஸ் உரிமையாளர்கள்  செய்கிற தகிடுதத்தங்களுக்கு அளவே கிடையாது. எந்தவிதத்திலும் பயணச்சீட்டு அச்சிட்டு விற்பனைசெய்து பணம் பெறக்கூடாது.  ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காகப் பயணம் செய்பவர்களிடமிருந்து பணம் வசூலிக்கத்தான் இந்தச் சட்டம் வகைசெய்கிறது.  ஆனால், எந்த  ஆம்னி பஸ்ஸ§ம் இதைப் பின்பற்றுவதில்லை. இத்தகைய சட்டவிரோத  செயல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, வருடந்தோறும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்மூலம் ஒரு ஆம்னி பஸ்ஸ§க்கு ரூபாய் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை வசூல்செய்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்குக்  கப்பம் கட்டப்பட்டு வருகிறது. இந்த   வகையில் அமைச்சர் மூலமாக  அ.தி.மு.க. தலைமைக்கு 15 கோடி  ரூபாய் வசூல்   செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

பணி நியமன ஊழல்

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 7500 ஓட்டுனர்கள்  மற்றும் நடத்துநர்களைத் தேர்வுசெய்தபோது, வேலையில் சேர  விரும்புபவர்களிடம் அ.தி.மு.க.வினர்  ரூபாய் 3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை லஞ்சம் வசூலித்தவர்கள்.  இந்தத் தொகையின் ஒரு பகுதியை  அ.தி.மு.க. நிர்வாகிகள் எடுத்துக்கொண்டு மீதியைச்  சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு வழங்கிதான் பணி நியமன ஆணை கிடைத்தது.  போக்குவரத்துக்கழக உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.10 லட்சமும், இளநிலைப் பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சமும் லஞ்சமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களில் நிகழ்த்தப்படும் பணியாளர்கள் நியமனம்மூலம் மட்டுமே ரூ.100 கோடி  அளவுக்கு லஞ்ச வேட்டை நடத்தப்பட்டுள்ளது.

வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளின் ஊழல்

மிக முக்கிய கேந்திரமான நகரப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள்  பதிவு எங்கு நடைபெறுகிறதோ, அந்த  இடத்திற்கான வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ரூ.25 லட்சம்  லஞ்சமாகத் தரவேண்டும். மோட்டார்வாகன  ஆய்வாளர் பதவிக்கு  ரூ.10 லட்சம் தரவேண்டும். இந்தப் பணத்தை அமைச்சருக்கு லஞ்சமாகக் கொடுத்துவிட்டு பதவிக்கு வருகிற போக்குவரத்து அதிகாரி நாள்தோறும் லஞ்சவேட்டை நடத்தி வருவார். இதற்குப் பல இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு லஞ்ச வேட்டையைச்  செய்து, அமைச்சருக்குக் கொடுத்த பணத்தை மீட்பதோடு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை  லஞ்சமாகச் சம்பந்தப்பட்ட  அமைச்சருக்குச் செலுத்தவேண்டும். அப்படி செலுத்தவில்லையெனில், அவர் அந்தப்   பதவியில் நீடிக்க முடியாது.

சாதாரண ஆர்.டி.ஓ. அலுவலர் பதவிக்கு ரூ.10 லட்சம்,  மோட்டார் வாகன ஆய்வாளருக்கு ரூ.5 லட்சமும் லஞ்சம் கொடுத்தால்தான்  பதவி வழங்கப்படும். ஆர்.டி.ஓ. அலுவலகங்களில்  பணிபுரியும் அதிகாரிகள்மீது லஞ்சம் மற்றும்

வேறு ஏதேனும்  புகார்கள் வந்தால்  அதை விசாரித்து, துறை சார்ந்த நடவடிக்கையிலிருந்து தப்பவைக்க  அதிகாரிகள்மூலம் அமைச்சருக்கு ரூபாய் ஒரு லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை புகாரின் தன்மைக்கேற்ப  லஞ்சம் தரவேண்டும்.

ஓட்டுநர் பள்ளி ஊழல்

ஓட்டுநர்  பள்ளி நடத்திட, அங்கீகாரம் பெற  லஞ்சமாக ரூ.2 லட்சமும், ஓட்டுநர் பள்ளி அனுமதியைப் புதுப்பிக்க  ரூ.50 ஆயிரமும் லஞ்சம் தரவேண்டும். சென்னையைத் தவிர்த்து மினி பஸ் பர்மிட்களுக்கு ரூ.4 லட்சமும், அதைப் புதுப்பிக்க  ரூ.50 ஆயிரமும் லஞ்சம் தரவேண்டும்.

ஆம்னி பஸ்களுக்கு ஒப்பந்த முறையில்  பர்மிட் அளிக்கப்படுகிறது. ஒரு பர்மிட்டிற்கு ரூ.4 லட்சம்  முதல்  ரூ.10 லட்சம் வரை வழித்தடத்திற்கு ஏற்றார்போல்   லஞ்சம் தரவேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள  ஆட்டோ, கார் விற்பனையாளர்கள் ஒரு வாகனத்தைப்  பதிய வைக்க ரூ.5 ஆயிரம் சம்பந்தப்பட்ட  ஆர்.டி.ஓ. அதிகாரிக்கு  வழங்கவேண்டும். தமிழகத்தில்  ஒரு நாளைக்கு 600 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.  இதில்மட்டும் ஒரு நாளைக்கு  ரூ.3 கோடி  லஞ்சமாக அமைச்சருக்குச்  செல்கிறது.

இதைத் தவிர, தமிழகம் முழுவதும் 140 போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகமும் மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம்  வரை வசூலித்து அமைச்சருக்கு லஞ்சமாகத் தரவேண்டும். தமிழகம் முழுவதும் 140 போக்குவரத்து அலுவலகங்களும் ஜனவரி மாதம் வருடாவருடம் 50 ஆயிரம் ரூபாயை ‘சேஃப்டி ஃபண்ட்’ என வசூலித்து அமைச்சருக்குத்

தரவேண்டும். மேற்படி  வசூல்   பணிகளைப் போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில்  பாலாஜிக்காக முன்னின்று செயல்படுபவர்கள் சங்கத் தலைவர்களாக இருக்கும் சம்பத்குமார், தரணி  என்பவர்களே ஆவர். இப்படித்தான் தமிழ்நாட்டில் போக்குவரத்துத்துறையில்  அனைத்து  நிலைகளிலும் அ.தி.மு.க.வினர்  லஞ்ச வேட்டை நடத்தி வருகின்றனர்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *