வீட்டுமனைப் பிரிவுகள்

வீட்டுமனைப் பிரிவு சார்ந்த   உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம்  ஞிஜிசிறிக்குத்  தரவேண்டும். சிவிஞிகி அலுவலகத்திற்கு ஏக்கருக்கு  ஒரு லட்சம் தரவேண்டும். இதைத் தவிர ஏக்கருக்கு ரூ.5 லட்சம் தரவேண்டும். ஒப்புதல் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து / நகராட்சித் தலைவருக்கு ஏக்கருக்கு  ஒரு லட்சம் கொடுத்தால்தான் அங்கீகாரம் கிடைக்கும்.  இதில்தான் ஆளுங்கட்சியினர் கொழுத்து வருகிறார்கள்.

நஞ்சை நிலத்தை வீட்டுமனை பிரிவாக மாற்ற லஞ்சம்

நஞ்சை நிலத்தை வீட்டுமனைப் பிரிவாக   மாற்ற  ஒன்பது துறைகளிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கவேண்டும். இதில் வருவாய், தீயணைப்பு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை உட்பட அடங்கும். இறுதியில் மாவட்ட ஆட்சியர் வீட்டுமனைக்கு ஏற்ற  இடம் எனச் சான்றளிக்க ஏக்கருக்கு ரூ.2 லட்சமும் மற்ற  ஒன்பது  துறைகளுக்குத் தலா ரூ.1 லட்சமும் தரவேண்டும்.

பின்னர் இந்த   நிலத்தைத் திரும்பவும் உள்ளூர்  திட்டக் குழுமம் மூலம் அமைச்சரைப் பார்த்து சம்பந்தப்பட்ட துறையில் மீண்டும் லஞ்சம் தரவேண்டும். ஆக, இந்தத் துறையில் மொத்தமாக  ஒரு ஏக்கர்  அப்ரூவல் பெற ரூ.18.50  லட்சம்  லஞ்சமாகக் கொடுக்கவேண்டும்.

கட்டடங்கள்

சாதாரணக் கட்டடங்களுக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட  பகுதியில் கீழ்கண்டபடி லஞ்சம் தரவேண்டும்.

ஒரு கிச்சனுக்கு  அமைச்சருக்கு  ரூ.25,000

மாநகராட்சி அலுவலகத்திற்கு ரூ.10,000

வார்டு கவுன்சிலருக்கு ரூ.25,000

மின்வாரிய இணைப்பு பெற ரூ.10,000

மெட்ரோ வாட்டர் இணைப்பு பெற ரூ.5,000

சாலையில் கொட்டப்படும் மணல் மற்றும் செங்கல்,  ஜல்லி ஆகியவற்றுக்குச் சம்பந்தப்பட்ட காவல்  நிலையத்திற்குத் திட்டம் முடியும் வரை மாதம் ரூ.1,000 முதல் ரூ.2,000   லஞ்ச கட்டணம் செலுத்தவேண்டும்.

சிறப்புக் கட்டடங்கள்

கிச்சனுக்கு அமைச்சருக்கு  (சதுர அடிக்கு ரூ.100) குறைந்தபட்சம் ரூ.50,000

சி.எம்.டி.ஏ. அலுவலகத்திற்கு ரூ.25,000 கவுன்சிலருக்கு ரூ.25,000

மின் இணைப்பு பெற ரூ.10,000

மெட்ரோ வாட்டர் இணைப்பு பெற ரூ.5,000

காவல்  நிலையத்துக்கு ரூ.2,000

மேலே கூறப்பட்டபடி லஞ்சம் கொடுத்தால்தான் உங்கள் மனையில், உங்கள் பணத்தில், உங்கள் வீட்டைக் கட்டிக்கொள்ள முடியும். இதில் ஏதாவது ஒருவகையில்  லஞ்சப் பணத்தைக் கொடுக்கவில்லை என்று சொன்னால், வீடு கட்டுபவர் தமது  நிம்மதியை இழக்க நேரிடும். இதுதான் தமிழகத்தின் தலையெழுத்து. இதற்கு முடிவுகட்ட நீதி விசாரணை மட்டுமே உரிய தீர்வாக இருக்கமுடியும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *