தமிழக அரசு துறைகளிலேயே அதிக அளவில் வரி  வருவாயைத் தரக்கூடிய  துறை இதுதான். அதேபோல, இதில் மெகா  ஊழல்கள் நடைபெறுவதற்கும்  நிறைய வாய்ப்புகள் உள்ளன. வணிக வரித்துறை அமைச்சரை  நியமிக்கும்போதே சர்வவல்லமை படைத்தவராக  இருக்கிறாரா எனப்  பார்த்துதான் முதலமைச்சர் தேர்வுசெய்து நியமிப்பார். ஏனெனில், வணிக  வரித்துறை ஆட்சியாளர்களுக்கு  ஒரு தங்கச்சுரங்கம். வணிக வரித்துறையில்  அனைத்து நிலைகளிலும் ஊழல் செய்வதற்கு வாய்ப்புகள் கணக்கில்  அடங்காதவை. அங்கு நடப்பது எல்லாமே ஊழல்தான்.  லஞ்சம் கொடுத்தால்தான்  எதுவுமே நடக்கும். அந்த  வகையில் லஞ்சத்திலேயே புரள்கிற துறைதான் வணிக வரித்துறை.

வணிக வரித்துறையில் நியமனங்களுக்கு  லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டுதான் அமைச்சர் சம்பத் நியமனம் செய்வார். மதிப்புக் கூட்டு வரி  எண் பெறுவதற்கு உதவி ஆணையருக்கு ரூ.5,000   முதல் ரூ.10,000  வரை லஞ்சம் தரவேண்டும்.வருடாந்திர மதிப்பீட்டு கணக்கைச் சமர்ப்பித்து ஆணை பெறுவதற்கு tuக்ஷீஸீ ஷீஸ்மீக்ஷீ தீணீsவீநீ  அடிப்படையில் ரூ.50 லட்சத்துக்கு ரூ.10,000,  ரூ.1 கோடிக்கும்மேல் இருந்தால்  ரூ.50,000  லஞ்சம் தரவேண்டும். இந்த   வகையில்  ஒரு மாதத்துக்கு ரூ.20 லட்சம்  ஒரு உதவி ஆணையர் வசூல்செய்வதற்கு  வாய்ப்பு இருக்கிறது. இதேபோல, 236 உதவி ஆணையர்கள் வசூல்செய்து சம்பந்தப்பட்ட அமைச்சருக்குச் சேர்க்கவேண்டும்.

ஃபார்ம் சி  மற்றும் ஃபார்ம் எஃப். படிவங்கள் பெற  லஞ்சம். டிராவல் பில் இல்லாமல் செக் போஸ்ட்டில் பிடித்துவிட்டால்  அதற்கும் லஞ்சம். தடைசெய்யப்பட்ட  பான், குட்கா போன்ற லாகிரி  வஸ்துகள் விற்பனை நடைபெறுவதை வணிக வரித்துறையினர் கண்டுகொள்வதே இல்லை. ஏனெனில்,  அதற்கும் லஞ்சம். வணிக வரித்துறை  ஏய்ப்பைக் கண்டுகொள்ளாமல் இருக்க லஞ்சம் கொடுத்தால் எந்த  நடவடிக்கையும் இருக்காது. ஒரு பொருளுக்கு  டபுள்  பில்லிங் இருப்பது  குறித்து லஞ்சம் கொடுத்தால் எந்தப்  பிரச்சினையும் இருக்காது. அதேபோல பில் இல்லாமல் விற்பனை செய்வது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது.  இந்த வகைகளில் வருமான வரித்துறையில் ரூ.100   கோடிக்கும்மேல்  லஞ்ச வேட்டை நடத்தி அ.தி.மு.க.வினர் கொள்ளையடித்து வருகிறார்கள். இதற்கெல்லாம்  ஒரே விமோசனம் நீதி விசாரணைதான்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *