அ.தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறையில் ஊழல் நீக்கமற  நிறைந்திருக்கிறது. எதில்  ஊழல் செய்தாலும், கல்வித்துறையில் ஊழல் செய்வதை  யாருமே மன்னிக்க மாட்டார்கள். பல்கலைக்கழக  துணைவேந்தர்  பதவிகள் ஆட்சியாளர்களால் ஏலம்போட்டு  விற்கப்படுகின்றன. துணைவேந்தர் பதவிக்கு ரூ.5 கோடி  முதல்  ரூ.20 கோடி  வரை லஞ்சம் பெறப்படுகிறது.

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ரூ.20 லட்சம், துணைப் பேராசிரியர்கள் ரூ.10  லட்சம், விரிவுரையாளர்கள் ரூ.8 லட்சம் என லஞ்சக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, வசூல்   வேட்டை நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகப்  பதவிகள் அனைத்தும் லஞ்ச வேட்டை மூலமே நிரப்பப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு அரசாணை  (நிலை) எண்.79 உயர்கல்வித் (இ2)   துறை, நாள் 28.05.2012இல்  தமிழ்நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் கலை மற்றும்  அறிவியல் கல்லூரிகள் / கல்வியியல் கல்லூரிகளில் 01.06.2008 முதல் 31.05.2011  வரை காலியாக உள்ள 3,120 ஆசிரியர் பணியிடங்கள், உதவி பேராசிரியர்கள் / நூலகர் / உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் நிரப்புவதற்குக் கல்லூரிக் கல்வி  இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.

கல்லூரிக் கல்வி  இயக்குநர் அவர்கள், சில கல்லூரிகளுக்கு அக்கல்லூரிக்கு நிரப்பிக் கொள்ள, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் விவரங்களையும் எண்ணிக்கையையும் குறிப்பிட்டு அனுமதி வழங்கியுள்ளார்கள்.பெரும்பான்மையான கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ரோமன் கத்தோலிக்கக் கல்லூரிகளுக்கும், சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ  கல்லூரிகளுக்கும் அனுமதி  வழங்கப்படாமல் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பது தெரிய வருகிறது. மண்டல கல்லூரிக் கல்வி  இணை இயக்குநர்கள் அந்தந்த மண்டலத்தில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்குச் சென்று காலிப்பணியிட விவரங்களைச் சரிபார்த்து சென்றுள்ளார்கள்.  இருப்பினும், இன்றும்  பெரும்பான்மையான கல்லூரிகளுக்கு அனுமதி  வழங்கப்படவில்லை.

காலிப்பணியிடங்கள் நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட  சில கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்களுக்கு இனச்சுழற்சிமுறை சரியாகப் பின்பற்றப்படவில்லை,  நியமனங்கள்  சரியில்லை போன்ற காரணங்களைக் காட்டி,  நியமன ஒப்புதலும்  மானிய அனுமதியும் மண்டல கல்லூரிக் கல்வி  இணை இயக்குநரால் வழங்கப்படவில்லை.

இப்பணியிடங்களில் நியமனம் பெற்ற சில கல்லூரிகளின்  விரிவுரையாளர்களின் கல்வித்தகுதிக்குச் சார்ந்த   பல்கலைக் கழகங்களால் நியமனத்தகுதி  ஒப்புதல் (னிuணீறீவீயீவீநீணீtவீஷீஸீ கிஜீஜீக்ஷீஷீஸ்ணீறீ)  வழங்கப்படவில்லை. மேலும், பல்கலைக்கழகங்கள் ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுக்குழு உறுப்பினர்கள் பட்டியலைக் கல்லூரிகள் கோரும்போது  தேர்வுக்குழு உறுப்பினர்கள்  பட்டியலை வழங்காத நிலையும் உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு விரிவுரையாளர் பணியிடத்திற்கு ரூபாய் ஏழு லட்சமும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு தலா இரண்டு லட்சமும் அமைச்சருக்கும்,  அமைச்சரைச் சார்ந்தவர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும், கல்லூரி நிர்வாகங்கள்  தரவேண்டும். அவ்வாறு தந்தால்தான் காலிப்பணியிடங்களை நிரப்ப  அனுமதி வழங்கப்படும் என்று பணம் கோருகிறார்கள் என்பதும் தெரிய  வந்துள்ளது.

01.06.2008  முதல் 31.05.2011  முடிய உள்ள காலிப்பணியிடங்களே இன்னும் நிரப்பிட அனுமதி வழங்கப்படாத  நிலையில், 01.06.2011  முதல் 31.05.2014 முடிய அரசு உதவிபெறும்  கல்லூரியில் ஏற்பட்ட  காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைப் பரிசீலனைக்குழு (ஷிநீக்ஷீutவீஸீஹ் சிஷீனீனீவீttமீமீ),  ஒவ்வொரு அரசு உதவிபெறும் கல்லூரிக்கும் சென்று, நிர்ணயம் செய்து,  கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பியுள்ள அறிக்கையின்படி இப்பணியிடங்களை நிரப்பிக்கொள்ள கல்லூரிக் கல்வி  இயக்குநருக்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட உள்ளது என்பதும் தெரிய  வருகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு ஏற்கெனவே 01.06.2008  முதல் 31.05.2011  முடிய உள்ள காலிப்பணியிடங்களுக்கான அனுமதியினை இன்னும் அனுமதி வழங்கப்படாத அரசு உதவிபெறும்  கல்லூரிகளுக்கு உடனடியாக வழங்கவேண்டும்.

விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பிட அனுமதி வழங்குவதில் ஊழல்  நடைபெறுகிறது. இது தவிர, பல்கலைக்கழக  துணைவேந்தர்கள், பதிவாளர்கள்,  மேலும்  கல்லூரிக் கல்வி  இயக்குநர்கள்  நியமனத்திலும் ஊழல் நடைபெறுகிறது. இதுதொடர்பாக இந்து   நாளிதழில் செய்திகள் வெளியாகிஉள்ளன. இதுபோலவே, பல்கலைக்கழக ஆட்சிக்குழு (ஷிஹ்ஸீபீவீநீணீtமீ)  நியமன உறுப்பினர்கள் நியமனத்திலும்  ஊழல் நடைபெறுவது கண்கூடானது. இவ்வாறாகக் கல்வி  கடைசரக்காக  மாறி, வணிக நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரிகளுக்கு அரசு சாதகமாகவும், சேவை மனப்பான்மையோடும், கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்களுக்குச் சோதனையான  காலமாகவும் மாறியது

இந்த   அரசின் ஆட்சியில்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *