மாணவர்களுக்கு இலவச லேப்&டாப் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி  வருகிறது. லேப்&டாப் ஒன்றுக்கு ரூ.1,500   அதிகம் கொடுத்து வாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்று ஜிளிமி  கூறுகிறது. மாணவர்களுக்கு வழங்கக் கூடிய லேப்&டாப்பில்  அ.தி.மு.க.  அரசு ஊழல் செய்து வருகிறது.

3900 கோடி  ரூபாய் மடிக்கணினி ஊழல் அ.தி.மு.க.  ஆட்சியில் ரூ.3,900   கோடியில் கொள்முதல்  செய்யப்பட்ட மடிக்கணினிகள் விநியோகத்தில் பயனாளிகள்  பற்றிய விளக்கப்  பட்டியல் எதுவுமே இல்லாத நிலையில் அரசு நிர்வாகம் நடைபெற்றிருக்கிறது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ‘தி  இந்து’   ஆங்கில நாளேட்டிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்முறைகேட்டை அந்நாளேடு அம்பலப்படுத்தி  யுள்ளது. இந்த   மடிக்கணினி ஊழல் குறித்து,  “கீலீஷீ நிஷீt ஜிழி’s திக்ஷீமீமீ லிணீஜீtஷீஜீs”  என்ற தலைப்பில் ஊழலை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.2011ஆம் ஆண்டு செட்பம்பர் மாதம் முதற்கொண்டு மாநிலத்திலுள்ள பள்ளி  மாணவ மாணவிகளுக்கு இலவசமாக 21 லட்சம் மடிக்கணினிகளை அ.தி.மு.க.  அரசு வழங்குவதென முடிவெடுத்தது. இதுமேலும் 30 லட்சமாக உயர்த்தத் திட்டமிடப்பட்டது. மொத்த எண்ணிக்கைகள் அறிவிக்கப்பட்டாலும் இலவச மடிக்கணினி விநியோகத்தில் எந்த  ஒரு அரசுத்துறையும்  இதன் பலன் பெற்றவர்களின் பட்டியல்களைத் தன்வசம் வைத்திருக்கவில்லை. இதுகுறித்து ‘தி  இந்து’   ஆங்கில நாளிதழ் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்  இந்த இலவச மடிக்கணினி விநியோகத்தில் பயனாளிகளின் பெயர், வயது, பள்ளி விவரம் மற்றும் அவர்கள்  தொடர்பான இதர விவரங்கள் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த  ‘எல்காட்’  நிறுவனம், நாங்கள் கொள்முதல் முகவர்களாக மட்டுமே  செயல்பட்டோம். இத்திட்டத்தை முன்னின்று செயல்படுத்தியது ‘சிறப்புத் திட்டங்கள் &    அமலாக்கத் துறை’தான்  என்று கைகாட்டியது. அத்துறையிடம் தொடர்புகொண்டபோது, அது பள்ளிக் கல்வித்துறையைக் கைகாட்டுகிறது.  அந்தத் துறையிடம் இதுபற்றிக் கேட்டால், மாவட்டக் கல்வி  அதிகாரிகளுக்குத் தகவல் அறியும் உரிமைக் கடிதத்தை  அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்புகிறார்கள். அதைப்  பெறுகிற மாவட்ட அளவிலான அதிகாரிகளும் பயனாளிகளின்  பெயர்  தெரியாமல் தங்கள்  கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளுக்கு அதை அனுப்பி, தேவையான விளக்கங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

இதில் எல்லோரையும்  அதிர்ச்சியில்  ஆழ்த்துகிற  செய்தி என்னவென்றால், இலவச மடிக்கணினி  பெற்ற பயனாளிகளின் ஒருங்கிணைந்த பட்டியல் இல்லவே இல்லை என்பதுதான். ரூ.3,900   கோடி  முதலீட்டில் எத்தனை மடிக்கணினிகள் வாங்கப்பட்டன? அது யார் யாருக்கு வழங்கப்பட்டன? இதற்கான விடை அறிய தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின்மூலம் பகீரத முயற்சி மேற்கொண்ட  ‘தி  இந்து’   ஆங்கில நாளேட்டுக்கு  ஏமாற்றம்தான்  மிஞ்சியது.

இவை எல்லாவற்றையும்விட மிகப்பெரிய  கொடுமை என்னவெனில், மடிக்கணினி பெற்றவர்களில் பலர் 4 ஆயிரம் ரூபாய்க்கும் 5 ஆயிரம் ரூபாய்க்கும் பகிரங்கமாக விற்பதுதான். நிதிநிலை அறிக்கையில்  2014ஆம் ஆண்டில், 5 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு  விநியோகம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  யார் யாருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது  என்ற பயனாளிகளின் விவரம் எவருமே கண்டுபிடிக்க  முடியாத சிதம்பர ரகசியமாக ஏன் மாறியது? வழங்கப்பட்ட மடிக்கணினிகளை  அ.தி.மு.க.வினர் மூலமாக வெளிச்சந்தையில் விற்று  பயனடைய தரப்பட்டதா? மடிக்கணினிகளைக் கொள்முதலே செய்யாமல் வாங்கியதாகக் கணக்கு காட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *