தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதிகளில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளிலே மீத்தேனுடைய மறுவடிவமாகயிருக்கிற ஹைட்ரோ கார்பன் அங்கே எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக முயற்சிக்கிற போது பல்லாயிரகணக்கான விவசாயப்பெருமக்களும் பல்லாயிரகணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாழ்படக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தஞ்சை,புதுக்கோட்டை மாவட்ட மக்கள் கொதித்தெழுந்து தங்களுடைய எதிர்ப்புக்களை தெரிவித்திருக்கிறார்கள். உடனடியாக இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் . இல்லையென்றால் மக்களோடு சேர்ந்து அந்த போராட்டத்திலே காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். புதுக்கோட்டை பகுதியிலே நடைபெறுகிற அந்த முயற்சியை கண்டித்து காங்கிரஸ் சார்பிலே மக்களை சேர்த்து அறப்போராட்டம் நடத்தப்படும்.
-- திரு. சு. திருநாவுக்கரசர். தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *