தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துச் செய்தி – 08-04-2017

மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் வாழும் அனைத்து ஜைன சமுதாய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பீகார் தலைநகர் பாட்னா அருகில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர் அரச வாழ்வை துறந்து, தமது செல்வத்தை மக்களுக்கு தானமாக வழங்கியவர். இம்சையை விட்டு அகிம்சையை கடைப்பிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்க்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை மக்களுக்கு விளக்கி, அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர்.

அவரது பிறந்தநாளை கொண்டாடும் இந்நாளில் அவரின் போதனைகளை பின்பற்றி தமிழகத்தில் வாழும் ஜைன சமுதாய மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *