இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் மீது அளவற்ற பற்றும், மதிப்பும் வைத்திருக்கிற பெருந்தகையாளர்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு இடங்களில் நன்கொடையாக சொத்துக்களை எழுதி வைத்துள்ளனர். அதேபோல காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சிக்காக ஆங்காங்கே சில இடங்களில் உள்ளூர் காங்கிரஸ் அறக்கட்டளையின் பேரில் சொத்துக்களை விலைக்கு வாங்கி உள்ளனர். இந்த சொத்துக்கள் தவறான நிர்வாகத்தின் காரணமாக பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு, சிலர் அனுபவித்து வருகிறார்கள். சில இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளன.இத்தகைய சொத்துக்களை மீட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் பராமரிப்பில் கொண்டு வர உரியநடவடிக்கைகளை எடுப்பதற்காக கீழ்க்கண்ட சொத்து மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினரோடு மாநில, மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் கட்சிகளின் நிர்வாகிகள் ஒத்துழைப்பும் ஆதரவும் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *