பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதற்கொண்டு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், நவஇந்தியாவை உருவாக்கிய தலைவர்களின் பெருமையையும், சிதைத்து சிறுமைப்படுத்துகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசப்பிதா மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை தியாகி என்று சொல்லுகிற அளவுக்கு பா.ஜ.க.வுக்கு துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நவஇந்தியாவின் சிற்பிகள் என்கிற பட்டியலில் 12 தலைவர்களை சேர்த்து அவர்களுடைய அஞ்சல் தலைகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டன. இந்த பட்டியலில் முன்னாள் பாரத பிரதமர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், சமூக சேவகர்கள் ஆகியோர் அடங்கியிருந்தனர். ஆனால் இதை சகித்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள தலைவர்களின் அஞ்சல் தலைகளை வெளியிடுவதை நிறுத்தி வைத்து ஆணை பிறப்பித்திருக்கிறது.
ஆணை பிறப்பித்ததோடு நில்லாமல், புதிதாக 16 தலைவர்கள் பெயர்களை பட்டியலிட்டு அவர்களுடைய அஞ்சல் தலை வெளியிடப்படும் என்று அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இதை ஒட்டுமொத்த இந்தியர்களும் கடுமையாக எதிர்ப்பார்கள். கட்சி எல்லைகளை கடந்து இந்த நாட்டை நிர்மாணித்தவர்களின் புகழுக்கு களங்கம் கற்பிக்கிற வகையில் பா.ஜ.க. செயல்படுவதை எவரும் அனுமதிக்க முடியாது.
இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும், உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திப் பிடிப்பதற்கும் தம் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர்கள் அன்னை இந்திராவும், தலைவர் ராஜீவ்காந்தியும் ஆவார்கள். தீவிரவாத பிரிவினை சக்திகளை முறியடிக்கிற வகையில் நடவடிக்கைகள் எடுத்ததற்காக அன்னை இந்திராவும், ராஜீவ்காந்தியும் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களது தியாகத்தை போற்றுவதற்கு பா.ஜ.க. தயாராக இல்லாவிட்டாலும், இழிவுபடுத்துவதற்கு எந்த உரிமையும் இருக்க முடியாது. அதை தேசபக்தி உள்ள மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
எனவே, நவஇந்தியாவின் சிற்பிகளாக கருதப்பட்ட அன்னை இந்திரா, ராஜீவ்காந்தி ஆகியோருடைய அஞ்சல் தலைகளை நிறுத்தி வைத்திருக்கிற மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள தபால் நிலையங்களின் முன்பாக மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற 18.9.2015 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதில் பொதுமக்களும், காங்கிரஸ் கட்சியினரும் பெருமளவில் பங்கேற்று தேச துரோகச் செயல்களுக்கு துணைபோகிற பா.ஜ.க.வுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிட அன்போடு வேண்டுகிறேன்.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக நடத்தப்படுகிற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பட்டியல் இத்துடன் இடம் பெற்றிருக்கிறது.

கோயமுத்தூர் – திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன்
சென்னை – திரு. சு. திருநாவுக்கரசர், திருமதி. டி. யசோதா
திருச்சிராப்பள்ளி – டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன்
திருவள்ளூர் – திருமதி. குஷ்பூ சுந்தர்
கிருஷ்ணகிரி – திரு. கே. கோபிநாத், MLA
காஞ்சீபுரம் – திருமதி. விஜயதரணி, MLA
திருநெல்வேலி – திரு. ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்
தேனி – திரு.ஜே.எம். ஆரூண்
மதுரை – திரு. திருச்சி வேலுச்சாமி
விருதுநகர் – திரு. மாணிக்கம் தாகூர், திரு. சிதம்பர பாரதி
கடலூர் வடக்கு – திரு. கே.எஸ். அழகிரி
கடலூர் தெற்கு – டாக்டர் கே.ஐ. மணிரத்தினம்
வேலூர் – திரு. உ. பலராமன், Ex.MLA
தூத்துக்குடி – திரு. ஏ.பி.சி.வி. சண்முகம்
கன்னியாகுமரி – திரு. பி. வேல்துரை, Ex.MLA
கரூர் – செல்வி. எஸ். ஜோதிமணி, திரு. பி.என்.
நல்லுசாமி
திண்டுக்கல் – திரு. வீனஸ் மணி, திரு. சிங்கை தருமன்
திருவண்ணாமலை வடக்கு – திரு. எம். கிருஷ்ணசாமி
திருவண்ணாமலை தெற்கு – திரு. சி.டி. மெய்யப்பன்
நீலகிரி – திரு. தாராஷபி
சேலம் – திரு.எஸ்.எம்.இதாயத்துல்லா,திரு.மோகன் குமாரமங்கலம்
விழுப்புரம் – திரு.எம்.ஜோதி
திருவாரூர் – திரு.டி.செல்வம்
மற்றும் முன்னணித் தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கிறார்கள்.

001002


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *