தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி:

அறிவியல் தமிழின் தந்தை என அழைக்கப்பட்ட முனைவர் மனவை முஸ்தபா காலமான செய்தி கேட்டு மிக்க துயரமடைந்தேன். 30 மொழிகளில் வெளிவந்த யுனஸ்கோ கொரியரின் தமிழ் பதிப்பை 35 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி உலக அரங்கில் தமிழ் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவர்.

அறிவியல் தமிழின் செழுமைக்காக எட்டு அகராதிகளை பதிப்பித்து வெளியிட்டவர் மனவை முஸ்தபா. அவரது தமிழ் பணிக்கு சிகரம் வைத்தாற் போல் பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியத்தின் தமிழ்ப் பதிப்பு வெளிவர காரணமாக இருந்தவர். அவர் வெளியிட்ட கணினி கலை களந்திய அகராதி, அறிவியல் தமிழ் போன்ற எண்ணற்ற நூல்கள் தமிழை நவீனப்படுத்துவதற்கு பெருந்துனையாக இருந்தன.

தமது வாழ்நாள் முழுவதும் தமிழின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட முனைவர் மனவை முஸ்தபா அவர்களின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கே ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகும். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறென். அவரது இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *