இளமைப் பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தின் மீதும் பெருந்தலைவர் காமராஜர் தலைமையின் மீதும் அளப்பரிய பற்றுடன் இயக்கப் பணியாற்றி 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்று, மக்கள் தொண்டராக வாழ்ந்த திரு. பாலையா அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஒரு தூண் சாய்ந்து விட்டதாக வேதனைப்படுகிறேன். காங்கிரஸ் கட்சியின் அமைப்பிலும், சட்டமன்றத்திலும் எளிமை, நேர்மை, சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தொண்டால் பொழுதளர்ந்த திரு. பாலையா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *