18.2.17 அன்று தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட நிகழ்ச்சியின்போது தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திராவிட முன்னேற்றக் கழக செயல் தலைவருமான திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்திற்குள் இருந்த காவல் துறையினரால் தாக்கப்பட்டதையும், எதிர்கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்களும் தாக்கப்பட்டதையும் கண்டித்தும், சட்மன்றத்தில் நிகழ்ந்த ஜனநாயக விரோத செயல்களை கண்டித்தும் வரும் 22.2.17 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ள திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ள உண்ணாவிரத அறப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கிறது.

எல்லா மாவட்டங்களில் உள்ள மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து முன்னனி நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சி தோழர்களும் சம்மந்தப்பட்ட அந்தந்த மாவட்டங்களில் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *