தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்களின் இரங்கல் செய்தி.

புதுக்கோடடை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவராக இருந்து சிறப்பாக மக்கள் பணியாற்றியவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடக்க காலம் தொட்டு தொடர்ந்து திராவிட முன்னணித் தலைவர்களில் ஒருவராக பணியாற்றி வந்தவரும் மறைந்த அமரர் பெரியண்ணன் அவர்களோடு தோளோடு தோள் நின்று பணியாற்றியவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளருமான அண்ணன் திரு.கே.பி.கே.தங்கவேலு அவர்கள் இயற்கை எய்திய செய்திக் கேட்டு மிகுந்த மன வருத்தமடைகிறேன். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தோழர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும் எனது சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

1,728 people reached

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *