தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் வாழ்த்து அறிக்கை

பொதுவாழ்க்கையின் தொடக்கத்தில் பத்திரிகையாளராக, கல்லூரி பேராசிரியராக, பிறகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த திரு.கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தற்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதை மனதார வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தமிழக தலைவராக பணியாற்றி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் அரும்பணியாற்றியவர் திரு.காதர் மொகிதீன். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது காங்கிரஸ் தலைமையோடு, குறிப்பாக அன்னை சோனியா காந்தி அவர்களிடம் அளவற்ற அன்பை கொண்டிருந்தவர். அமைதியும், அடக்கமும் கொண்ட இவர் கருத்துக்களை மிகத் தெளிவாக ஆணித்தரமாக பேசுகிற சுபாவம் உள்ளவர். இவரைப் போன்றவர்கள் சிறுபான்மையினர் நலனுக்காக பேசுகிறபோது பெரும்பாண்மை மக்களின் நன்மதிப்பையும் பெற்றதை எவராலும் மறுக்க முடியாது.
மதநல்லிணக்கத்தின் மறுவடிவமாக திகழ்கிற பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் புதிய பொறுப்பை தேசிய அளவில் பெற்றிருப்பதன் மூலம் தற்போது நடைபெற்றுவரும் வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு நிச்சயம் வெற்றி பெறுவார். புதிய பொறுப்பை ஏற்றிருக்கும் திரு.கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற வேண்டுமென என் சார்பிலும், தமிழக காங்கிரஸ் சார்பிலும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *