தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் மே தின வாழ்த்துச் செய்தி 30-04-2017
உலகத்திலுள்ள தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி வெற்றிகண்ட நாளாக மே-1 கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று தொழிலாளர்கள் ஊர்வலங்கள், கருத்தரங்குகள் நடத்தி தங்களது உரிமைக் குரலை எழுப்பி வருகிறார்கள். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் குரல் எழுப்பியும் அதை மத்திய அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை.
இந்நிலையில் தொழிலாளர்கள் அனைவரும் நரேந்திரமோடி அரசுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுவது அவசியமாகும். இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் உழைத்ததில் தொழிலாளர்களின் பங்கு மகத்தானது. அத்தகைய உழைப்பை வழங்கி தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தொழிலாளர் வர்கத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மே தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *