
காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு. ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஆகியோர் வீட்டிலும், அலுவலகத்திலும் மத்திய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசை தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக திரு. ப. சிதம்பரம் விமர்சித்து வந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவரை அச்சுறுத்துவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்நிலையில், பொதுவாழ்க்கையில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிற திரு. ப. சிதம்பரம் அவர்களின் நன்மதிப்பை சிதைக்கிற முயற்சியாக மத்திய பா.ஜ.க. அரசு இச்சோதனையை நடத்தியிருக்கிறது. பா.ஜ.க.வின் இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி என்றுமே தயார் நிலையில் இருக்கிறது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை அடக்கி விடலாம் என நினைக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.க.வை விமர்சித்து வருகிற திரு. ப. சிதம்பரத்தின் செயல்பாடுகளை எவரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொள்கிற திரு. ப. சிதம்பரம் அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி என்றும் துணை நிற்கும்.
Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
மகாவீரர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் வாழும் அனைத்து ஜைன சமுதாய மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பீகார் தலைநகர் பாட்னா அருகில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர் அரச வாழ்வை துறந்து, தமது செல்வத்தை மக்களுக்கு தானமாக வழங்கியவர். இம்சையை...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை - 26.12.2015 சமீபத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி, அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறார்கள். ஆட்சியாளர்கள் மீது இவர்களுக்கு கடும் கோபம்...