தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவரும், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான திருமதி.டி.யசோதா அவர்களின் சகோதரர் திரு.டி.எஸ்.முத்து அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

திரு.டி.எஸ்.முத்து அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரை இழந்து வாடும் அவரது சகோதரி திருமதி.டி.யசோதா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு: அன்னாரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணியளவில், எண்.106ஏ, வெள்ளாளர் தெரு, கோடம்பாக்கம், சென்னை -24 இல் நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *