அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஆணையின்படி இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் கடந்த ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சேர்க்கப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு படிவங்கள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாவட்ட பார்வையாளர், மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைப்பு தேர்தல்கள் நடைபெறுவது குறித்து கலந்தாலோசிப்பதற்காக 13.8.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில தேர்தல் அதிகாரிகள் திரு. கே. பாபி ராஜூ, திரு. சஞ்ஜய் தத், துணை தேர்தல் அதிகாரிகள் திரு. சத்யன் புத்தூர், திரு. முருகன் முனிரத்தினம் ஆகியோர் பங்கேற்கிற கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், பிற மாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்திற்கு கிடைத்திருக்கிற வரவேற்பை பார்த்து மிகுந்த நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுப்பினர் சேர்ப்புப் பணிகள் நமக்கு மெய்ப்பித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளம் அமைப்பதற்கு உறுப்பினர் சேர்ப்பு பணியை சிறப்பாக செய்ததற்காக மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *