‘மக்கள் அனைவரும் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்தால் மட்டுமே போராடி பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட முடியும், சுதந்திரத்திற்காக இன்னுயிரை ஈந்தவர்களின் தியாக உணர்வுகளை நாம் என்றென்றும் போற்றி வணங்குதல் வேண்டும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல அர்ப்பணிப்புடன் பாடுபட்டு கணினி ஊழியர்கள் முதல் கல் உடைப்போர் வரை வாழ்க்கையில் உயர்வு பெறவும், சாதாரண மக்கள், விவசாய பெருங்குடி மக்கள், மகளிர், தலித், சிறுபான்மை, மீனவர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளிமிக்க வாழ்க்கையை உருவாக்கும் வகையில் புதிய பாரதத்தை படைத்திட இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்”.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் சாதாரன, மிக சாதாரன மக்கள் வாழ்ந்திட முடியாத நிலையினை உருவாக்கி, அவர்களது வாழ்வில் இருள் சூழ வைத்துள்ளது. சமயப்போர்வையில் ஜாதி, மத, பேதங்களை இவர்கள் நாடெங்கும் ஏற்படுத்தி மக்களின்; அமைதியான வாழ்க்கையினை சீர்குலைத்து வருகின்றனர். இந்த மத்திய மக்கள் விரோத, ஜனநாயக விரோத, பாசிச பா.ஜ.க. ஆட்சியை அகற்றிட மதசார்பற்ற அணிகளை அன்னை சோனியாகாந்தி, இளந்தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்களின் தலைமையில் ஒன்றிணைத்து காங்கிரசின் நல்லாட்சி மலர்ந்திட நம்மை அர்ப்;பணித்து, விடுதலைக்கு வித்திட்ட தியாகிகளை இன்று நினைவு கூர்ந்து சபதமேற்போம்.

இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *