விவசாயிகள் வருமானம் என்பது நிலையற்ற ஒன்றாகும். . 2003-04 இல் பா.ஜ.க. ஆட்சியில் ரூ.83 ஆயிரம் கோடியாக இருந்த விவசாயிகளின் கடன், மத்திய காங்கிரஸ் ஆட்சியில் 2014-15 இல் ரூ.8 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் தற்போது 7 சதவீதமாக உயர்த்தப்பட்டு விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்கிற கொடூரமான பரிந்துரையை ரத்து செய்யவேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 27.2.2016
நேற்று வெளியிடப்பட்ட பா.ஜ.க.வின் பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்கிற கொடூரமான பரிந்துரை வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே பா.ஜ.க. ஆட்சியில் பலமுனைகளில் பல்வேறுவிதமான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் விவசாயத்திற்கு வருமான வரி என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும்....