அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்துறை

‘நேஷனல் ஹெரால்டு’ பற்றிய உண்மைகள் மற்றும் சில தகவல்களின் சுருக்கம்

  1. நேஷனல் ஹெரால்டு விஷயத்தில் இரண்டு முகங்கள் உண்டு.

ஒன்று: அரசியல் –  மற்றென்று: சட்டம்

சட்டம்: காங்கிரஸ் கட்சியினாது சட்டரீதியான அணுகுமுறையினையின் மேன்மையை எப்பொழுதும் மதிப்பளிக்கும்.

அரசியல் பன்முகம் கொண்டவை:

மோடி அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது. பன்முக வடிவம் கொண்டது.

(1) யார் இந்த சுப்பிரமணிய சாமி?

காங்கிரஸ் தலைமையின் மீது வீண்பழி உண்டாக்கி, பொய்யான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற வழக்குகளை தயாரித்து மக்கள் மத்தியில் அவமானம் உண்டாக்க, பிஜேபியும், நரேந்திர மோடியும் சாமிக்கு அதிகாரம் வழங்கியுள்ளனர்.

சாமி, காங்கிரஸ் கட்சியின் அங்கத்தினரும் அல்ல. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் உரிiயாளர்களான, அசோசியேட்டெட் ஜெனரல் கமிட்டியின் பங்குதாரரும் அல்ல. காங்கிரஸ் கட்சியின் பேரில் அவப்பெயர் உண்டு பண்ண, பிஜேபியினரால், தூண்டப்பட்டு அடிப்படை ஆதாரமில்லாத புகாரை உண்டாக்குவதே சுப்பிரமணிய சாமியின் ஒரே நோக்கம். அவர், பிஜேபியின் மத்திய குழு உறுப்பினர். அவர்களின் கீழ்த்தரமான தந்திரங்களின் ஒரு துறைக்கு தலைவரும் ஆவர். ஆரசியில் ரீதியாக பழிவாங்க, இவரை நரேந்திர மோடி தந்திரமாக பயன்படுத்தி வருகிறார்.

(2) கடந்த 19 மாதங்களில் ‘மோடி அரசு’ தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் கீழ்நோக்கி பயணிக்கிறது.

கடந்த 13 மாதங்களாக நாட்டின் ஏற்றுமதி தொடர்ந்து இறங்கிக் கொண்டே போகிறது.

முக்கியமான உற்பத்திகள் செய்யும் தொழில்கள், தாழ்வான நிலை தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றன.

வணிக மற்றும் வியாபாரம் மிகவும் கீழ்மட்டத்தை அடைகின்றன.

விலைவாசி உயர்வால், சாதாரண மனிதனின் முதுகை உடைக்கிறது.

இதுவரை இல்லாத வரலாறு காணாத அளவுக்கு உழவுத்தொழில் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் (உழவர்கள்) தாங்கொண்ணா துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, ‘மோடி அரசு’ சுப்பிரமணிசாமி போன்றவர்களை பயன்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட முயற்சிகளினால் காங்கிரஸ் தலைமையும், கட்சியும் நிலை தடுமாறாது மேலும் பணிய வைக்கவும் முடியாது.

(3) டெல்லி உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு 07.12.2015 அன்று மாலை 6.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக, அறிவிக்கப்படுவதற்கு முன்பே, உயர்நீதிமன்ற உத்தரவை பிஜேபி கட்சியின் முன்னாள் அமைச்சரும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான ‘ஷா நவாஜ் கான் அறிவித்தார்?

ராஜஸ்தான் மாநிலத்தில் 1700 சுரங்கங்கள் முறைகேடாக வழங்கியதில் ரூ.204000/- (இரண்டு லட்சத்து நாலாயிரம் கோடி) ஊழல் நடைபெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் ஆட்சேபணைகள் மற்றும் மத்திய கணக்குகள் தணிக்கை மேலாண்மை (CAG) ஆகியவர்களிடம் புகார் மனுக்கள் காங்கிரஸ் கட்சியினரால் கொடுக்கப்பட்டதன் பேரிலும், 1650 சுரங்களுக்கான அனுமதிகள் திரும்பப் பெறப்பட்டன.

ராஜஸ்தான் மாநில பிஜேபி முதல்வர் திருமதி.வசுந்தரா ராஜே சிண்டியா, பிஜேபியின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி.சுஸ்மா சுவராஜ் மற்றும் ஐபில் கிரிக்கெட் ஊழல் மன்னன் லலித் மோடி ஆகியோரின் கீழ்த்தரமான சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு விசாரணை நடத்தாமல் சென்ற நாடாளுமன்ற தொடரை வீணாக்கியதும், இந்த விவகாரத்தில் முதல் அறிக்கை பதிவு செய்யாததுமே ஊழலின் உறைவிடம் பிஜேபி என்பது தெரியவந்துள்ளது.

குஜராத்தில் எதிர்கட்சித் தலைவரை அவமானப் படுத்துவதற்கென்றே நரேந்திர மோடி அரசியல் எதிரி, ஷங்கர்சிங் ரணை நடத்த வேண்டியது ஆச்சர்யமான தகவல்.

(5) காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மோடி அரசின் பரவலான ஊழல் சாம்ராஜ்யம் மத்தியிலும், மாநிலங்களிலும் (பிஜேபி ஆளும் மாநிலங்கள்) எப்படி தலைவிரித்தாடுகிறது என்பதை பகிரங்கப்படுத்தின.

‘மத்திய பிரதேஷ்’ மாநிலத்தில் ஊழியர் தேர்தலில் ஊழிய

வகேலாவின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது.

இந்தியாவின் மிகவும் மூத்த காங்கிரஸ் கட்சியின் ஹிமாச்சல் பிரதேச முதல்வர் வீர்பத்ரா சிங் அவர்கள், தனது மகளின் திருமண விழாவை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, ‘மத்திய புலனாய்வுத்துறை’ காவலர்களால் அவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ‘ரெய்டு’ நடத்தி அவருக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சித்து பலன் இல்லாமல், நிதித்துறையின் அமலாக்க இயக்குனர் துறையினரால் இரண்டாவது முறையாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர்நீதி மன்ற உத்தரவை அரசியல் ஆக்குவதிலும் சுப்பிரமணிய சாமியை ஆதரிப்பதில் வேகம் காட்டப்பட்டதே எப்படி. இவையெல்லாம் அரசியல் பழிவாங்கும் போக்கு அன்றி, வேறு என்னவாக நாம் உணர முடியும்.

(4) ஆகஸ்ட் 2015 இல் அமலாக்க இயக்குனர் துறையால் முறைகேடுகள் இல்லையென்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ சம்மந்தப்பட்ட ஆவணம் மீண்டும் செப்டம்பர் 2015 இல் மறுவிசா

ர் தேர்வில் ஏற்பட்ட ‘வியாபம் ஊழல்’ மற்றும் மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வில் நடந்த ‘டிமாட் (DMAT)’ ஆகியவை மாபெரும் ஊழல்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கோடி மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு பாழானதே.

சட்டீஸ்கர் மாநில பிஜேபி முதல்வர் டாக்டர் ராமன் சிங்கும் அவரது மனைவியாரும் சம்மந்தப்பட்ட ரூபாய் 36,000 கோடி மதிப்பிலான சட்டிஸ்கர் பொது விநியோகத்துறையின் ஊழல் சம்மந்தப்பட்ட துறையினரால் கைப்பற்றப்பட்ட நாள்குறிப்பிலிருந்து வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் பிஜேபியின் ‘மோடி கேட்’ மற்றும் சுரங்க ஊழல்களுக்கு சப்பைக்கட்ட, ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் திரு.சச்சின் பைலட் மீதும், முன்னாள் காங்கிரஸ் முதல்வர் ‘அசோக் கெலாட்’ அவர்கள் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், ஹரியானா மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற எதிர்கட்சியினரும் விதிவிலக்கல்ல.

குஜராத்தில் திரு.ஹர்திக் படேல் என்ற இளைஞருக்கு எதிராக, ‘தேசத்துரோகம்’ குற்றச்சாட்டு உட்பட 36 வழக்குகள் தொடரப்பட்டன. பட்டேல் சமூகத்தினரின் போராட்டத்திற்கு எதிராக 20, 000 (இருபதாயிரம்) கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அதேபோல், அசாம், மேற்கு வங்காளம், பிஹார், உத்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், எதிர்கட்சிகளும், எதிர்கட்சி தலைவர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகள் அல்லவா? இரட்டை வேடம் இல்லையா?

பிஜேபியும் சுப்பிரமணி சாமியும் ‘நேஷனல் ஹெரால்’ விவகாரத்தில் கிரிமினல் குற்றம் நடைபெற்றுள்ளதாக பிரச்சனையை கிளப்புகிறார்கள். நிதியமைச்சர் திரு.அருண்ஜெட்லி பகிரங்கமாக சுப்பிரமணிய சாமியை ஆதரிக்கிறார். இதிலிருந்தே, மோடி அரசும், சாமியும் இறுக்கமாக இணைந்து காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்க முயற்சிப்பது தெளிவாகிறது.

தயவு செய்து கவனிக்க:

நேஷனல் ஹெரால்டு மற்றும் அதன் பதிப்புகள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு அங்கம்.

அவைகள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய கருவியாக பயன்படுகின்றன.

‘வெள்ளையனே வெளியேறு’ (1942) போராட்டத்தின் பிரிட்டீஸ் அச்சிட்டு வெளியிடுவதை தடை செய்தது.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஆதரிப்பது என்ற நோக்கத்திற்காக மட்டுமே, ‘நேஷனல் ஹெரால்டும்’ அதன் பதிப்பகத்தாரான அசோசியேட்டட் ஜர்னலிஸ்ட்ஸ் லிமிடெட் செயல்பட்டனர்.

‘நேஷனல் ஹெரால்டு’ தொடர்ந்து தன் பணியை ஆற்ற காங்கிரஸ் மனமுவந்து பல கட்டங்களில் கடனாக ரூபாய் 90 கோடி (ரூ.90 கோடி) பத்திரிகையை நடைபெற ஊழியர் சம்பள பட்டுவாடா செய்ய, பிராவிடெண்பண்டு, சட்டரீதியான செலவுகள் மற்ற கடன்களை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் பேசி விருப்பமுடனும், பெருமையுடனும் கடனுதவி செய்துள்ளது.

மறுக்க முடியாத சில உண்மைகள்:

ஒரு அரசியல் கட்சி கடன் வழங்குவது கிரிமினல் குற்றம் என்று இந்தியாவில் எந்த சட்டத்திலும் இடமில்லை.

அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் காங்கிரஸ் கட்சியுடன் 1937 லிருந்து காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் குறிக்கோள்கள் நிறைவேற இணைந்த செயல்பட நிறுவனம். அந்த நிறுவனத்திற்கு காங்கிரஸ் கடன் வழங்குவது அரசியல் கட்சி என்ற முறையில் எந்த வகையில் கிரிமினல் குற்றம்.

இந்த பண ஃ கடன் பரிவர்த்தனைகள்  காங்கிரஸ் கட்சியின் கணக்கு ஏட்டில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கணக்குகள் ஆடிட்டர்களால், சட்ட ரீதியாக பரிசீலிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திடம் இந்தக் கடன் பரிவர்த்தனையைப் பற்றிய சட்ட பிரச்சனையை யாரும் கிளப்பவில்லை.

இந்திய தேர்தல் ஆணையத்திடம் இதுபற்றிய விளக்கத்தை சுப்பிரமணிய சாமியே கேட்ட பொழுது, தேர்தல் ஆணையம் தனது 6.11.2015 நாளிட்ட பதிவில், எந்த அரசியல் கட்சியும் தனது நிதியிலிருந்து கடன் வழங்குவதை தடுக்க ‘இந்திய மக்கள் பிரதிநிதித்’ துவ சட்டத்தில் இல்லையென தெளிவாக விளக்கியுள்ளனர்.

கட்சிகளின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவது தேர்தல் ஆணையம் மட்டுமே செய்யமுடியும் என்பதறிந்தும் சாமியின் நடவடிக்கைகள் கேள்விக்குறியே.

இந்தியக் கம்பெனிகள் சட்டம் பிரிவு-25 இன் படி, லாபத்திற்காக அல்லாத, நிறுவனமாக 2010 இல் ‘யங்-இந்தியன்’ என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. அதன் நோக்கம் ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை புதுப்பித்து வெளியிடுவது.

25-பிரிவு : லாபத்திற்காக இல்லாத நிறுவனத்தின் பங்குதாரர்கள் டிவிடெண்டையோ, லாபத்தையோ, சம்பளமோ அல்லது வேறு எந்த நிதி ஆதயாமோ பெற முடியாது. ஆகவே, அன்னை சோனியா காந்தியோ, திரு.ராகுல் காந்தியோ, நிர்வாகக் குழுவின் மற்ற உறுப்பினர்களோ எந்த நிதி ஆதாயமும் பெறவில்லை. இது 2010 இல் ‘யங் இந்தியன்’ பதிவு செய்யப்பட்டதிலிருந்து இன்று வரை இதுவே உண்மை. அசோசியோட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்டின் கடனை, ‘யங் இந்தியன்’ நிறுவனத்திற்கு ரூ.50 லட்சத்திற்கு மாற்றிக் கொடுக்கப்பட்டு, இது சம்பந்தமான முறையான ஆவணங்களை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது எந்தச் சட்டத்தாலும் தடை செய்யப்பட்ட பரிவர்த்தனை அல்ல. மேலும், கடனை ‘யங் இந்தியன்’ நிறுவனத்திற்கு மாற்றிய செயல், சுப்பிரமணியசாமி சொல்வது போல்,  கிரிமினல் குற்றம் அல்ல. ‘யங் இந்தியன்’ நிறுவனத்திற்கு கடன்தொகையை மாற்றியமைக்க அசோஸியேட்டெட் ஜர்னல்ஸ் லிமிடெட், ‘யங் இந்தியன்’ நிறுவனத்திற்கு ரூ.90 கோடி மதிப்பிற்கு பங்கு ஃ ஷேர்கள் வழங்கியதன் மூலம் தன்னடைய கடனை நேர் செய்து விட்டது.

கம்பெனிகள் சட்டத்தின் படி, ‘பங்குதாரர்கள் கூட்டம்’ ஒப்புக் கொண்ட தீர்மானத்தின் படி, அசோஸியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் இந்த கணக்கை வரைமுறை செய்துள்ளது. சுப்பிரமணிய சாமி சொல்வது போல், இதில் எந்த ‘கிரிமினாலிட்டியும்’ சட்டபடி இல்லை.

இவைகள் சட்டத்திற்கு உட்பட்டும், சந்தேகத்திற்கு இடமில்லாத வகையிலும் நடத்தப்பட்டுள்ளன. இதில் எந்த முறைகேட்டிற்கோ அல்லது கிரிமினாலிட்டிக்கோ எங்கே இடம் உள்ளது.

அன்னை சோனியா காந்தியோ அல்லது திரு.ராகுல் காந்தியோ அல்லது நிர்வாகக்குழு உறுப்பினர்களில் யாருமோ இதுவரை ஒரு ரூபாiயைக் கூட சம்பளமாகவோ அல்லது வருமானமாகவோ அல்லது டிவிடென்டாகவோ, வேறு எந்த சலுகையோ பெற்றார்கள் என்று சுப்பிரமணிய சாமியோ, வேறு யாருமோ குறையாகவோ குற்றமாக கூற முடியவில்லை.

அசோசியேடேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்டின் சொத்துக்களுக்கு இதன் மூலம் ‘யங் இந்தியன்’ நிறுவனம் உரிமையாளராக முடியாது. அசோஸியேட்டெட் ஜர்னல்ஸ் லிமிடெட்டின் சொத்துக்கள், அந்த நிறுவனத்தை ஃ கம்பெனியை மட்டும் சேர்ந்தது. இக்கம்பெனியை ஒருவேளை விற்கப்பட்டாலும், ‘யங் இந்தியன்’ பங்குதாரர்களுக்கு விநியோகிக்க முடியாது.

‘யங் இந்தியன்’ நிறுவனம், ஒருவேளை கலைக்கப்பட்டாலும், ‘யங் இந்தியன்’ நிறுவனத்தின் சொத்துக்கள், பங்குதாரர்களுக்கு விநியோகிக்க முடியாது.

‘யங் இந்தியன்’ நிறுவனம், ஒருவேலை கலைக்கப்பட்டாலும், ‘யங் இந்தியன்’ நிறுவனத்தின் சொத்துக்கள், லாபத்திற்கா அல்லாத மற்றொரு செக்ஷன்-25 பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திற்கே மாற்ற முடியும்.

அசோஸியேடெடட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சொத்தின் எந்த பகுதியும், ‘யங் இந்தியன்’ நிறுவனத்திற்கோ அல்லது அதன் பங்குதாரர்களின் நன்மைக்கோ செல்லாது. சுப்பிரமணிய சாமி கூறுவது போல் எந்தக் கிரிமினல் குற்ற நடவடிக்கையும் இல்லை. காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களையும் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்க, சாமியும், பிஜேபியும் ஒரே நோக்கமாக செயல்படுகிறார்கள். குpரிமினல் குற்றச்சாட்டு ஆதாரமற்ற அவதூறு.

கனரா வங்கி நிர்வகித்த, ‘கேன்ஸ்டார்’ என்ற பரஸ்பர நிதியில், பிஜேபி முதலீடு செய்து, அதில் பெறப்பட்ட அதிக தொகையை ‘பிசினஸ்ப்ராபிட் ஃ லாபம் என்று தங்கள் கணக்குகளில் வரவு வைத்துள்ளார்கள். இது கிரிமினல் குற்றம் இல்லை. அப்படி குற்றமானால், பிஜேபிக்கு எதிராக சாமி புகார் செய்வாரா?

பிஜேபி நடத்திய பத்திரிகைகளினால் நஷ்டம் ஏற்பட்டு, அதை பிஸினஸ் லாஸ் ஃ வியாபார நஷ்டம் என்று தனது கணக்குகளில் செலவு எழுதி வருமானவரி துறையிடம் சமர்ப்பித்துள்ளனர். இது வருமானவரிச்சட்டம் பிரிவு -13இன் படி அனுமதிக்கப்பட்ட முறையான நடவடிக்கைதான்.

காங்கிரஸ் கட்சி தலைமையை கொச்சைப்படுத்துவதற்காக அவர்கள் குற்றச்சாட்டை வைக்க அசோஸியேட்டெட் ஜர்னல்ஸ் லிமிடெட்டின் விவகாரத்தை எடுத்திருக்கும் சுப்பிரமணிய சாமியின் நோக்கம் நேர்மையாக இருந்தால், பத்திரிகைகள் நடத்தி, அதனால் உண்டான பணபரிவர்த்தனைகள் மற்றும் நஷ்டத்திற்காக வழக்கு தொடரவில்லை. பாராபட்ச அற்ற முறையில் சுப்பிரமணிய சாமி நடந்திருந்தால் பிஜேபி மீதும் அதன் தலைவர்கள் மீதும் புகார் தாக்கல் செய்திருக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் கடந்த காலங்களில் பலவிதமான எதிர்ப்புகளை நேர் கொண்டிருக்கிறார்கள். அரசியல் எதிரிகளால் பல பொய்வழக்குகள் சுமத்தப்பட்டன. இந்தக் கொடுமைகளுக்கு குறிப்பாக, அன்னை சோனியா காந்தியும், திரு.ராகுல் காந்தியும், திரு.பி.வி.நரசிம்மராவ் அவர்களும் ஆளாக்கப்பட்டனர். அது இன்னும் தொடர்கிறது. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கையும் விட்டு வைக்கவில்லை.

சுப்பிரமணிய சாமியும், பிஜேபியும் அன்னை இந்திரா காந்திக்கு எதிராகவும், பெருந்தலைவர் ராஜீவ் காந்திக்கு எதிராகவும் வழக்குகள் தொடுத்தனர். அதே மாதிரி, அவதூறு செய்யும் நோக்கத்திற்காக, பிஜேபியும், சுப்பிரமணிய சாமியும் தற்பொழுது மீண்டும் அதே அணுகுமுறையை தொடர்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் இப்படிப்பட்ட எதிர்ப்புகளுக்கு சளைக்காமல் நம்பிக்கையுடனும் நேர்வழியிலும் சந்தித்து, மக்கள் மன்றத்திலும், நீதிமன்றங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய மக்களின் ஒலியை உயர்த்தும் பணிக்கு, நாம் மீண்டும் உறுதியேற்போம். மக்களின் மன்றத்திலும், சட்டத்துறை கொண்டு நீதிமன்றங்களிலும் நாம் வெற்றிக்காக போராடுவோம்.

நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கிறது என்பது பொய்யான வாதம்.

பிஜேபியும், நரேந்திர மோடியும் கட்டவிழ்த்து விட்டிருக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கான அரசியல் போராட்டம்.

அருண் ஜெட்லியும், பிஜேபியும் அரசியல் ஞாபகக்குழப்பம் என்ற வியாதியில் அவஸ்தைப்படுகிறார்கள்.

ஒரு பொதுநலவழக்கின் அடிப்படையில், உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வு துறையில் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு திரு.அமித்ஷா (பிஜேபி தலைவர்) கைது செய்யப்பட்ட பொழுது, இதே அருண் ஜெட்லி மாநிலங்களவையை முடக்கி, ஐக்கிய முற்போக்கு அரசால் அன்று முன்மொழிந்த சரக்கு சேவை வரி சட்டத்தை (ஜிஎஸ்டி) நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டது.

இந்தச் சம்பவம் மறந்து விட்டதா?

 

 

 


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *