பக்ரீத் பண்டிகை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களின் வாழ்த்துச் செய்தி

மகாத்மா காந்தி தலைமையில் ஒன்றுபட்ட இந்தியாவின் விடுதலைக்காக போராடி 1947 இல் மதத்தின் பெயரால் பிளவுபட்ட இந்தியாவைத்தான் விடுதலையாக பெற முடிந்தது.

பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட காலத்தில் ஏறத்தாழ 3 கோடி இஸ்லாமியர்களுக்கு இந்தியாவிலே பாதுகாப்பினை வழங்குவோம் என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உறுதிமொழி கூறினார்.

அதை காப்பாற்றுவதற்காகத்தான் மதச்சார்பின்மை என்கிற கொள்கையை காங்கிரஸ் கட்சி தனது உயிர்மூச்சாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கத்தோடு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

ஆனால் சமீபத்திலே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு மதச்சாப்பின்மை தேவையில்லை என்று கூறி, நமது நாட்டின் அடித்தளத்தை சிதைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

இன்றைக்கு இந்தியாவிலே வாழ்கிற 17 கோடி முஸ்லீம்களின் எதிர்காலத்தை அச்சுறத்துகிற வகையில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. அந்த தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்றுவதென காங்கிரஸ் கட்சி உறுதிகொண்டிருக்கிறது.

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாக கொண்டாடப்படுகிற பக்ரீத் பண்டிகை தியாகத்தை போற்றுகிற நாளாகும். தியாகத்திலே பிறந்து, தியாகம் செய்வதற்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற, மத கோட்பாடுகளை போற்றிப் பாதுகாக்கிற வகையில் வாழ்ந்து வருகிற இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த தியாக பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதச்சாப்பின்மையை காப்பாற்றி வருகிற காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டுமென இஸ்லாமிய பெருமக்களை தியாகத் திருநாளில் கேட்டுக் கொள்கிறேன்.

Bakrid

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *