வணக்கம்.

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் நாளை (30.10.2015) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

இந்நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு.சு.திருநாவுக்கரசர் மற்றும் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சென்னை, நந்தனம், அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்கள்

p2 (1)

 


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *