தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் 04.01.2016 திங்கள் கிழமை காலை 10 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம்: 1 : இரங்கல் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் 7 முறை காங்கிரஸ் உறுப்பினராக தேர்வு பெற்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்...