‘அருமையான நாட்கள், நல்ல நிர்வாகம், வணிகவளர்ச்சி முறைகளை எளிதாக்குதல், GDPல் 10% வளர்ச்சி, ஐந்து ஆண்டுகளில் 10 கோடிப்பேருக்கு வேலை, டிஜிட்டல் இந்தியா, விவசாயிகள் விளைபெருட்களுக்காக செலவிடப்பட்ட தொகையை விட 50% அதிகமாக வைத்து லாபகரமாக விலையை நிர்ணயித்தல், பணவீக்கத்தை குறைத்தல், புதியதோர் பொருளாதார நோக்கு’ என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசி அதன் பயனாக 2014 ஆட்சியில் கைப்பற்றினார் நரேந்திர மோடி.

Dr. மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு வலுவானதோர் பொருளாதார அடிப்படையை அமைத்திருக்கிறது.

பிஜேபியின் தவறான, உள்நோக்கமுள்ள பிரச்சாரத்தையும், உலகப்பொருளாதார நெருக்கடியையும், தவிர்த்துவிட்டுப் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகால (2004-2014), காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா இதுவரை இல்லாத அளவிற்கு பொருளாதார வளர்சியை அடைந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரமும், பிரமிக்கத்தக்க அளவிற்கு, ஆண்டுக்கு, சராசரியாக 7.6% அளவுக்கு உயர்ந்துள்ளது. GDPன் சதவிகிதம் என்ற முறையில் பார்த்தால் மூலதனம் 35.5% உயர்ந்துள்ளது .

தனி நபர் வருமானம் 3 மடங்கு உயர்ந்துள்ளது (2004 இல் ஆண்டுக்கு 24,163 ரூபாய் என்றிருந்த தனிநபர் வருமானம் 2012 இல் 68,747 ரூபாயாக உயர்ந்துள்ளது)

தொழில்துறையின் வளர்ச்சி 7.7% ஆகவும், விவசாயத் துறையில் 4.1% வளர்ச்சி, சேவைத்துறையில் 9.5% வளர்ச்சி ஆகியவற்றை தந்தது UPA அரசு.

2003-04ல் 113 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நியச்செலாவணி கையிருப்பு 2013-14ல் 300 பில்லியன் அமெரிக்க டாலராக மூன்று மடங்கு உயர்ந்து காணப்பட்டது (1 பில்லியன் என்பது 10 கோடிக்கு சமம்)

2004 மற்றும் 2014ம் ஆண்டுகளுக்கு இடையில் 318 அமெரிக்க  டாலர் மதிப்புள்ள அந்நிய நேரடி முதலீடு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது.

தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி, என்பது UPA அரசின் 10 ஆண்டுகளில் 64 பில்லியன் அமெரிக்கடாலரிலுருந்து 315 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

2004ல் 213 மில்லியன் டன்னாக இருந்த உணவுப் பொருட்களின் உற்பத்தி, 2014ல் 263 பில்லியன் டன்னாக உயர்ந்தது.

உணவுப்பொருட்களின் ஏற்றுமதி, UPA அரசின் 10ஆண்டுகாலத்தில் 7.5 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து 42.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்து காணப்பட்டது.

கிராமப்புற மக்களின் ஊதியம்; 17.5% உயர்ந்து காணப்பட்டது.

சமூக நலத்திட்டங்களுக்குகாக, UPA அரசு, தான் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில், தனது அரசின் மொத்தச் செலவில் 25% ஒதுக்கீடு செய்து முழுவதுமாக செலவழித்துள்ளது.

இது, UPA அரசு எந்த அளவிற்கு சமூகநலத்தின் மீது அக்கறை கொண்டுள்ளது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

உரிமைகளை உறுதிப்படுத்திடும் பல சட்டங்கள், அதுபோன்று உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள் ஆகியவை சமூகப் பாதுகாப்பிற்கும் பொருளாதார வளர்ச்சியின் பரவலாக்கத்திற்கும், வெகுவாக துணை புரிந்தன. இதனால் தான், UPA ஆட்சியின் பத்து ஆண்டுகளில், வறுமைக் கோட்டிற்கு கீழாக இருந்த 14 கோடி மக்களை, மேல் நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

UPA அரசின் 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில், கீழ்கண்ட துறைகளில் அந்நிய முதலீட்டினை கவர முடிந்தது.

 1. சாலைகள், துறைமுகங்கள், மின் உற்பத்தி ஆகிய துறைகளில் 100%
 2. தொலைத்தொடர்புத் துறையில் 100%

iii. குறிப்பிட்ட பொருளுக்கு மட்டும் சில்லறை வணிகம் அனுமதியளித்ததில் 100%

 1. தேயிலை உற்பத்தி, மற்றும் கொரியர்’ நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலதன சீரமைப்பு திட்டதில் 100%
 2. எண்ணை சுத்திகரிப்புத்துறை வியாபாரப் பொருட்களில் பங்குச் சந்தை, மின்சக்தி பரிமாறும் துறை மற்றும் துறைமுக முனையங்களில் தீர்வு நிறுவனங்கள் ஆகியவற்றில் 40%
 3. ஆயுட் காப்பீட்டில் 49%

vii. விமானத்துறையில 49%

எனப் பல சாதனைகளை ஈட்டியது UPA அரசாங்கம்.

ஆனால், NDA அரசு காலத்தில் நடப்பது என்ன?

பிஜேபியோ குளறுகிறது, தெளிவில்லாமல் பேசுகிறது.UPA செய்து வைத்திருந்த சாதனைகள் அனைத்தையும் தனது சாதனை என கூறி ஆக்கிரமித்து வருகிறது.

கீழ்கண்ட குறியீடுகள், இவற்றினை நன்றாக சித்தரிக்கின்றது

 1. பிரபல பிஜேபி தலைவரும், மோடியின் ஆலோசகருமான ‘அருண்ஷோரி, இந்த அரசு தனது நிதி பரிபாலனத்தில் தெளிவான நோக்குக் கொண்டதாக இல்லை’ எனச் சரியாக இந்த அரசின் செயல்பாட்டினை மதிப்பிடுகிறார்.
 2. ஹெச்டிஎப்சி வங்கியின் அதிபர் தீபக் பாரீக் ‘இந்தியாவில் வணிகம் செய்திடுவது எளிதாக உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்கிறார்.
 3. ஹெச்எஸ்பிசி வங்கியின் தலைவர் திருமதி நைனா லால் கித்பாய் ‘பிரதமர், தொழிலதிபர்களின் நம்பிக்கையை பெறத் தவறிவிட்டார்.

கடந்த ஒரு வருடமாக, 161 பொதுத்துறைத் திட்டங்கள், 585 தனியார் துறை திட்டங்கள் முடங்கி கிடக்கின்றன. இதனால் பலகோடி ரூபாய்கள் தேங்கிக் கிடக்கின்றன.

ஏற்றுமதியோ சென்ற ஆண்டை விட, 2015ம் ஆண்டு 11% சரிந்து உள்ளது.

தொழில் துறை இரண்டு முக்கியமான விஷயங்களில் கவலை கொண்டுள்ளது.

 1. முதலாவதாக, கடந்த காலத்திற்குரிய வரிகள் என்ற ‘வரிபேயை’ திணித்துள்ளது. (ஆனால் FIIன் நிர்ப்பந்தத்தின் பேரில், இதுப்பற்றி ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறி அதற்காக குழு ஒன்றினை அமைத்துள்ளது.
 2. பிஜேபி மற்றும் சங்பரிவாரங்களை சேர்ந்த வலதுசாரி சிந்தனை மற்றும் முரட்டுத்தனம் கொண்ட தொண்டர்களால், சமுதாயத்தில் பிரிவுணர்ச்சியை அடிக்கடி ஏற்படுத்துவதால் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்திடத் தயங்குகிறார்கள். இதனால், வேலைவாய்ப்புகள் பாழடிக்கப்பட்டுள்ளன.

2005 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திற்குப் பின், 2014 ஆண்டின் முடிவு வரை, ‘ஊதிய வளர்ச்சி’ என்பது மிகவும் குறைந்து 3.8 சதவீதமாகக் காணப்படுகிறது.

பொதுவாக, ஆடைகள் தயாரிப்பு உட்பட, அனைத்து ஜவுளித்துறை, தோல், உலோகம், மோட்டார் வாகனம், நகைக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், போக்குவரத்து, அனைத்துத் தகவல் தொடர்பு, BPO, கைத்தறி, மின்விசைத்தறி ஆகிய தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடிய துறைகள் அனைத்திலும் வளர்ச்சி என்பது மந்தமாகவே இருப்பது மட்டுமல்லாமல், குறைந்து கொண்டும் வருகிறது.

மோடி சர்க்கார், வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவோம் என உறுதியளித்துவிட்டுதான் ஆட்சிக்கு வந்தது. ஆனால், அதனால் வெறும் 1,75,000 வேலை வாய்ப்புக்களைத் தான் உருவாக்க முடிந்தது.

தொழிற்சாலைச்சட்டம், பயிற்சிகாலச் சட்டம், மேலும் பல ‘தொழிற்சாலைகள் சம்மந்தப்பட்ட சட்டம்’ ஆகியவற்றை நீர்த்துப் போகும்படி செய்து வருகிறது மோடி சர்க்கார். இதானல் பல, பிஜேபியைச் சேர்ந்த பிஎம்எஸ் தொழிற்சங்கம் உட்பட பல தொழிற்சங்கங்கள் பிஜேபி அரசின் இச்செயல்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.

‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ (Make-in-India)

மேற்குறிப்பிட்ட காரணங்களால் ‘இந்தியாவில் உற்பத்தி செய்திடுவோம்’ என்ற மோடியின் சூளுரை, வெறும் கோஷமாகவே இருக்கிறது.

ஏற்றுமதி சென்ற ஆண்டு 26.89 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2015 இல் அது 23.88 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்து விட்டது.

விவசாய பொருட்களாக அரிசி, கோதுமை, தானியம் ஆகியவற்றின் ஏற்றுமதி 135 லட்சம் டன் (29 சதவீதம்) என்ற அளவில், 2014-15 ஆம் ஆண்டில் குறைந்து காணப்படுகிறது.

தேயிலை, காப்பி, புகையிலை, வாசனை திரவியங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியோ, இறங்குமுகத்தில் உள்ளது.

ஏற்றுமதியில் இதுவரை நன்கு உயர்ந்து காணப்பட்ட, பருத்திநூல், மருந்து வகைகள், ரசாயனப் பொருட்கள் ஆகியவை கூட சரிந்து காணப்படுகின்றன.

‘Make-in-India – என்ற திட்டத்தை மோடியே கேலி செய்வது போல் அமைந்துள்ளது. அவர், பிரஞ்சு அரசுடன் ஏற்படுத்தியுள்ள ‘ரபேல் ஜெட் விமானம்’ சம்பந்தமான பல கோடி ரூபாய் பெறுமான ஒப்பந்தம்.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான் இதற்கான அடிப்படைகளை செய்து முடித்திருந்தது. இதன்மூலம், ரபேல் ஜெட் விமான தயாரிப்பதற்குறிய தொழில்நுட்பங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (HAL) மூலம் இந்தியாவிலேயே HAL நிறுவனம் ரபேல் விமானங்களை தயாரித்திட வேண்டும் என்றுதான் கூறிப்பிட்டிருந்தது.

இதுதான் உண்மையிலேயே Make-in-India திட்டமாகும்.

ஆனால், 36 ரபேல் விமானங்களை நேரடியாக பிரஞ்சு அரசிடமிருந்து வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதின் மூலம், மோடி, அவருடைய திட்டமான ‘Make-in-India’ திட்டத்தையே கேலிப் பொருளாக ஆக்கியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

கிராமப்புறப் பொருளாதாரமும், மிகுந்த துயரத்திலிருக்கும் கிராமப்புற மக்களும்

இந்தியாவின் மக்கள் தொகையில் 62.5 சதவீதம் கிராமப்புறத்தில்தான் உள்ளன.

இவற்றில் 49 சதவீதம் அன்றாட பணியாளர்கள்.

இவர்கள் நாட்டின் வளர்ச்சியில் (GDP) 17 சதவீதத்தக்குக் காரணமாக உள்ளனர்.

கிராமப்புற மக்களின் பொருட்களை உற்பத்தி செய்வது, வாங்குவது, விற்பது (அதாவது பண்டமாற்றல்) போன்ற நடவடிக்கைகள் தான், நாட்டின் வளர்ச்சியில் 35 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது.

ஆனால்!

காங்கிரஸ் ஆட்சியில் 17.5 சதவீதம் ஆக இருந்த ஊரக ஊதியத்தின் மதிப்பு, பிஜேபி ஆட்சியில் 3 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து விட்டது.

விவசாயத்துறையில் வளர்ச்சி 2013-14 இல் 47 சதவீதம் ஆக இருந்தது.

2014-15 இல் 2650 லட்சம் டன்னாக இருந்த விவசாயப் பொருட்களின் உற்பத்தி, பிஜேபி ஆட்சிக்காலத்தில் – (2014-15) 2500 லட்சம் டன்னாக குறைந்துவிட்டது.

விவசாயத்துறைக்குரிய உத்தேச முதலீடு, 2012-13 இல், GDP இல் 18.3 சதவீதம் ஆக இருந்தது. இது 2014-15 இல் 14.5 சதவீதமாக் குறைந்துவிட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக, விவசாயத்துறையில் அரசின் முதலீடும் குறைந்து காணப்படுகிறது.

 1. ‘ராஷ்டீரிய கிருஷி யோஜனா’ விற்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.7426 கோடி குறைக்கப் பட்டிருக்கிறது.
 2. ‘பிரதான மந்திரி கிருஷி சிஞ்சய் யோஜனா’ விற்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ.8156 கோடி குறைக்கப் பட்டுள்ளது.

பாவம்! கிராமப்புற ஏழை மக்கள்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *