தமிழக சட்டமன்றத்தில் 7 முறை காங்கிரஸ் உறுப்பினராக தேர்வு பெற்று காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்ட திருமதி ஏ.எஸ்.பொன்னம்மாள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அன்பை பெற்றவருமான விழுப்புரம் வி.ஜி.செல்லப்பா, மாணவப் பருவத்திலிருந்து காங்கிரஸ் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடோடு பணியாற்றிய முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் விருதுநகர் ஆர்.சொக்கர் ஆகியோரின் மறைவிற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டது.

சமீபத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தங்கள் உயிரை இழந்த 600 க்கும் மேற்பட்டவர்களின் மறைவிற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டது.

அதைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

 

1 857589_467075923479538_8933334950165864154_o 12402210_467075880146209_5683212659555276013_o 12418876_467075953479535_3539965341407529617_o 12489468_467075883479542_300187541097305203_o


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *