100 நாட்களுக்குள் கருப்புப்பணத்தை மீட்டே தீருவேன் என்ற உறுதியை அளித்து மோடி அரசு பதவிக்கு வந்தது. ஆனால், ரூ.9000 கோடி வங்கிகளுக்கு பாக்கியுள்ள ஒருவர் இந்த அரசின் கண் முன்னாலேயே இந்நாட்டிலிருந்து நழுவிட்டார் என்பது கண்கூடாகக் காணும் உண்மை.

ஏழு மாதங்களுக்கு முன்பே, அதாவது 29.7.2015 அன்றே நிதியைக் கையாண்டதில் முறைகேடுகள் மற்றும் நிதியை திசை திருப்புதல் போன்றவற்றைச் செயல்களில் ஈடுபட்டதாக, சிபிஐ கிரிமினல் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தும், இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக, விஜய மல்லையா விசாரிக்கப்படுகிறார். ஆனால், அவரைக் கைது செய்யவும் இல்லை. அவரது ‘பாஸ்போர்ட்டை’ முடக்கிடவும் இல்லை. அமுலாக்கப்பிரிவு இயக்குனரகம் (Enforcement Director) இவ்விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதேபோன்று, ‘இந்தியாவின் பாதுகாப்பு மாற்று ஆணையமும், மிகப்பெரிய மோசடிச் செயல்களைப் புலனாய்வு செய்யும் நிறுவனங்களும் இந்நிகழ்வுகள் பற்றிய விசாரணையைத் தொடங்கின. அதனாலும் பயன் ஏதுமில்லை.

வங்கிக்கடன் கூட்டுமைப்பின் மூலம் தான் வாங்கிய ரூ.9000/- கோடி கடனை திருப்பி செலுத்துவதிலிருந்து தப்பி விடுவதற்காகவே, இந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் விஜய மல்லையாவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை இப்பொழுது வெளிவந்திருக்கிறது.
இந்த அரசு முறைமுகமாக விஜய மல்லையாவுடன் ஒருபுரிதல் ஏற்பாடு செய்திருக்கிறதா, அல்லது மறைமுகமாக இயங்கிடும் சக்திகள் மூலம் இவ்விஷயத்தை கையாண்டிருக்கிறதா என்பதை மக்கள் முன்பு வைததிட இந்த அரசு கடமைப்பட்டிருக்கிறது.

மிகுந்த ஆயத்தங்கள் செய்து, 7 கனமான சூட்கேஸுகளுடன் விஜய் மல்லையா இந்த நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்.

விஜய மல்லையாவை கைது செய்திட வேண்டும் என்பதற்காக 12.10.2015 அன்றே, கண்டறியும் சுற்றிக்கையை சிபிஐ அனைத்து விமான நிலையங்களுக்கும் மற்றும் இவர் தப்பியோடிட ஏதுவாக இருக்கும் முனையங்களுக்கும் அனுப்பியுள்ளது. ஆனால், 23.11.2015 அன்று இந்த அறிக்கையை, ‘அவரைப்பற்றிய செய்திகளை மட்டும் தந்திட்டால் போதும்’ என்று மாற்றி அமைத்துள்ளது. மேலும் விஜய மல்லையா, ‘ஜெட் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானத்தில் முதல் வகுப்பில் பயணித்து, வெளிநாடு சென்ற மற்றும் இதர செய்திகளை சிபிஐ-க்கு, குடியேற்ற அதிகாரிகள் கொடுத்திட்ட போதிலும், அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்திட்டார்கள் இல்லை.

எஸ்.பி.ஐ.யின் தலைமையில் இயங்கும் வங்கிகளின் கூட்டமைப்பு, விஜய மல்லையா மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவரது ‘பாஸ்போர்டு’ பறிக்கப்பட வேண்டும் என்று கூறி ‘கடனைத் திருப்பி ஈட்டித்தரும் வழக்குத் தொடாந்த பின்பும், இந்த நாடகம் யாவும் நடந்தேறியுள்ளது.

28.2.2016 அன்று வங்கிகளின் கூட்டமைப்பிற்கு, ‘விஜய மல்லையா வெளிநாடு சென்றிடாமல் தடுத்திட, நீதிமன்றத்தில் வழக்குத் தொரட வேண்டும்’ என்று அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், அந்த அமைப்போ மார்ச் 5 ஆம் தேதிதான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ‘அட்டார்னி ஜெனரல்’ இதுபற்றி மார்ச் 8 ஆம் தேதிதான் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவித்தார். இந்த வழக்கு மார்ச் 9 ஆம் தேதி, நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது, சிபிஐயின் அறிவுரைப்படி, விஜய மல்லையா, மார்ச் 2 ஆம் தேதியே இந்நாட்டை விட்டுச் சென்றுவிட்டார் என்று அட்டார்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மோடி அரசே கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்.

  1. சிபிஐ 29.7.2015 அன்றே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திட்ட போதிலும் ‘விஜய மல்லையாவை கைது செய்ய வேண்டும் என்ற, 12.10.2015 தேதியிட்ட சிபிஐ யின் ‘கண்டறியும் சுற்றறிக்கையானது’, 23.11.2015 அன்று வெறும் ‘அவரைப் பற்றி செய்தி தந்திட்டால் போதும்’ என்ற அறிக்கையாக ஏன் மாறியது?
  2. பிப்ரவரி 28, 2014 ஆம் தேதியன்றே, பாதிக்கப்பட்ட வங்கிகள் விஜய மல்லையாவின் ‘பாஸ்போர்டை’ முடக்க உச்ச நீதிமன்றத்தை அணுக அரசாங்கம் அறிவுரை கூறிய பின்பும் எதற்காக விஜய் மல்லையா நாட்டை விட்டு செல்லும் வரை தாமதப்படுத்தி மார்ச் 5 ஆம் தேதிதான் அதற்குரிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்?
  3. பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள், விஜய மல்லையாவின் ‘பாஸ்போர்ட்டை’ முடக்க நடவடிக்கை எடுத்த பின்பும், மத்திய புலனாய்வுத்துறை – சிபிஐ 2015 ஜுலை மாதம் 29 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த பின்பு, விஜய மல்லையாவிற்கு எதிராக ‘கண்டறியும் சுற்றறிக்கை’ வெளியிட்ட பின்பும், செபி, எஸ்.எப்.ஐ.ஓ. சேவை வரி, அமுலாக்கப் பிரிவு இயக்குனரகம் மற்றும் ஏனைய அரசு துறைகளும் விஜய மல்லையா மீது விசாரணை மற்றும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையிலும், பாரதீய ஜனதா ஆட்சியே அவரை ஒரு ‘பாவி’ எனக்கூறிய நிலையில் ஏன் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, விஜய மல்லையா மீது ஒரு வழக்கும் இல்லை என்ற நொண்டி சாக்கு கூறி ஓடி ஒளிந்து கொள்கிறார்?
  4. நடந்த சம்பவங்களில் இருந்து புலப்படும் உண்மை என்னவென்றால், விஜய மல்லையாவை வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய ரூ.9000 கோடி ரூபாய் கடன் பாக்கியிலிருந்து தப்பிக்க வெளிநாடு தப்பி செல்ல தூண்டியது போல் இருக்கிறது இல்லையா?
    மோடி அரசாங்கத்திற்கும், விஜய மல்லையாவிற்கும் ரகசிய புரிதலும், மறைமுகமாக பேச்சுவார்த்தையும், பறிமாற்றமும் நடைபெறுகிறதா?

ஆம். எனில் ஏன் இந்த அரசாங்கம் அவற்றை மக்கள் முன்னிலையில் வைக்கவில்லை?

இந்த நேரத்தில், விஜய மல்லையா 2010 இல் பாரதீய ஜனதா கட்சியின் உதவியுடன் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய மல்லையா நமது நாட்டை விட்டு சென்ற விதமும், சூழ்நிலையும் மக்கள் மனதில் பல ஐயப்பாடுகளை எழுப்பியுள்ளன. மேலும், மத்திய அரசு மற்றும் அதன் துறைகள் செயல்பட்ட விதமும், இந்த அரசாங்கம் எவ்வாறு ரூ.9000 கோடி ரூபாயை மீட்க போகிறது என்பது சம்பந்தமாக பல கேள்விகள் எழுந்துள்ளன.

திரு.மோடி அவர்கள், மேலவையில் நேற்று ஆற்றிய உரையில், ‘வெளிப்படத்தன்மை மற்றும் பொறுப் புணர்ச்சியுடன் கடமையாற்றுதல் ஆக்கப்பூர்வமாக கடைபிடிக்கப்படும் என்ற அவரது வாக்குறுதி இத்தனை விரைவில் சரிந்து போனதற்கு காரணத்தை 130 கோடி இந்தியர்களுக்கு விளக்குவாரா?

விஜய மல்லையா விவகாரத்தில் கடமை தவறிய மத்திய புலனாய்வுத்துறை, நிதி அமைச்சகம், குடியேற்ற அதிகாரிகள் மற்றும் வங்கிகள் மீது இந்திய பிரதமர் மோடி தக்க நடவடிக்கைகள் எடுத்து தண்டனை பெற்றுத் தருவாரா?


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *