தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்களது திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக காலை 10.30 மணிக்கு கடற்கரை சாலையில் உள்ள அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு. கே.வீ. தங்கபாலு, திரு. குமரி அனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. கே. ராணி, துணைத் தலைவர் திரு. எச். வசந்தகுமார், ஆடுயு, திரு. ஆர். தாமோதரன், பொதுச்செயலாளர்கள் திரு. கே. சிரஞ்சீவி, திரு. கே. தணிகாசலம், திரு. அருள் பெத்தையா, திரு. சேலம் பாலு, திரு. கீழானூர் ராஜேந்திரன், திரு. எம். ஜோதி, மாவட்டத் தலைவர்கள் திரு. கராத்தே ஆர். தியாகராஜன், திரு. என். ரங்கபாஷ்யம், திரு. ராயபுரம் ஆர். மனோ, சிறுபான்மைப்பிரிவு தலைவர் திரு. அஸ்லம் பாஷா, மகிளா காங்கிரஸ் தலைவி திருமதி. ஜான்சிராணி, திருமதி. அசினா சையத், திரு. சொர்ணா சேதுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

img_0015 img_0023 img_0027 img_0031 img_0034 img_0035 img_0048 img_0049 img_0055 img_0056 img_0060 img_0067 img_0068


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *