தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 02.11.2016

Thirunavukkarasar at Kamala Theatre Owner VN Chidambaram Ninaivu Anjali Photos

முன்னாள் ராணுவ வீரர்கள் ஒரே பதவி – ஒரே ஓய்வூதியத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோக நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரே பதவி – ஒரே ஓய்வூதியத்தை உடனடியாக நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி வழங்கிய நரேந்திர மோடி, பிரதமர் பதவியேற்று 28 மாதங்களாகியும் நிறைவேற்றாததைக் கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் இத்தகைய போராட்டங்களில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி பங்கேற்று அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றியிருக்கிறார்.
தலைநகர் டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட பிறகு அவரது உடல் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த செய்தி கேட்டதும், உடனடியாக இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்கள் மருத்துவமனைக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முற்பட்டார். இவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி மருத்துவமனைக்கு உள்ளே செல்லக் கூடாது என்று அனுமதி மறுத்துவிட்டனர். இதையொட்டி அருகிலுள்ள மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டார். சிலமணி நேரங்கள் கழித்துத் தான் காவல் நிலையத்திலிருந்து ராகுல்காந்தி விடுவிக்கப்பட்டார். தற்கொலை செய்துக் கொண்ட தமது தந்தையை பார்க்கச் சென்ற அவரது மகனும் தடுத்து நிறுத்தப்பட்டு சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டார். அதேபோல, டெல்லி மாநில துணை முதல்வரும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய செயல்கள் மூலம் மத்திய பாரதிய ஜனதா ஆட்சியினர் தங்களது அடக்குமுறையை ஏவிவிட்டுள்ளனர்.
இந்தியாவின் பிரதான எதிர்கட்சியின் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள ராகுல்காந்தி அவர்களது ஜனநாயகப் பணியினை முடக்குகிற வகையில் அவரை அனுமதிக்க மறுத்து சிலமணி நேரங்கள் சட்டவிரோதமாக காவலில் வைத்தது நமது நாட்டில் குடியாட்சி நடைபெறுகிறதா ? சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா ? என்ற கேள்விதான் எழுகிறது. நமது நாட்டின் பாதுகாப்பிற்காக தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைகளை பரிவுடன் கவனிக்காமல் அடக்குமுறையை ஏவிவிடுவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. தற்கொலை செய்துக் கொண்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முற்பட்ட இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்களை சட்டவிரோதமாக தடுத்து, கைது செய்ததை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *