தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி – 2.12.2015

செட்டிநாடு குழும நிறுவனங்களின் தலைவராக திரு.எம்.ஏ.எம்.ராமசாமி அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிக துயரம் அடைந்தேன். கல்வி, இசை என பல்வேறு துறைகளில் அளப்பறிய பங்காற்றிய ராஜா சர்.அண்ணாமலை செட்டியார், ராஜா சர்.முத்தையா செட்டியார் ஆகியோரின் பாரம்பரியத்தில் வந்த திரு எம்.ஏ.எம்.ராமசாமி அவர்கள் தனது குடும்பத்தின் பெருமையை தொடர்ந்து காக்கும் வகையில் பல்வேறு சமூக பணிகளை செய்தவர்.

பின்தங்கிய சமுதாய மக்களுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வந்த கல்வியை பெறும் வகையில் சிதம்பரத்தில் நிறுவப்பட்டது தான் அண்ணாமலை பல்கலைக்கழகம். கல்வி, இசை, அரசியல் துறையில் இப்பல்கலைக்கழகம் மிகப் பெரிய சமூகப் புரட்சி செய்ததை எவரும் மறுத்திட இயலாது.

தொழில் அதிபராக இருந்தாலும், பொதுப்பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு சமூக சேவைகள் செய்து வந்த திரு.எம்.ஏ.எம்.ராமசாமி அவர்கள் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இவரது மறைவால் வாடும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழந்த இரங்கலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *