மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூ.5 மட்டுமே இருந்தது. அது தற்போது ரூ.20.48ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல 1 லிட்டர் டீசலில் கலால் வரி ரூ.15.83ஆக உயர்ந்துள்ளது. கடந்த 20 மாதங்களில் கலால் வரி உயர்வு மூலம்  ரூபாய் 1 லட்சத்து 48 ஆயிரத்து 977 கோடி, நரேந்திர மோடி அரசு வருமானத்தை  பெருக்கி கஜானாவை நிரப்பிக்கொண்டுள்ளது. இந்த வருமானத்தின் மூலமாகத்தான் நிதிப்பற்றாக்குறை சரிசெய்யப்பட்டுவருகிறது. நியாயமாக மக்களுக்கு போய்ச் சேரவேண்டிய பயன்களை அபகரிக்கிற நரேந்திர மோடி அரசு மக்கள் நலன் சார்ந்த அரசா? மக்கள் விரோத அரசா?  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 5.4.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. .வெ.கி.. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 5.4.2016

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்துவரும் நிலையில் அதனுடைய பயன்களை மக்களுக்கு போய்ச் சேரவிடாமல் தடுக்கிற நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை பலமுறை உயர்த்தி உள்ளது. நேற்றைய அறிவிப்பின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.19ஆகவும், டீசல் விலை ரூ.1 ஆகவும், உயர்த்தியிருக்கிறது. இத்தகைய விலை உயர்வுகளால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பலமுறை எதிர்கட்சியினர் வலியுறுத்தியும் அதை அலட்சியப்படுத்தும் வகையில் தொடர்ந்து விலை உயர்வை நரேந்திர மோடி அரசு அறிவித்து வருகிறது.

பா.ஜ.க. அரசு மத்தியில் ஆட்சி அமைந்தபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 115 டாலராக இருந்தது, தற்போது 39 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த வீழ்ச்சியின் காரணமாக பெட்ரோல் விலை ரூ.30ஆகவும், டீசல் விலை ரூ.20ஆகவும் விற்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.61.32ஆகவும், டீசல் விலை ரூ.50.49ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவதோடு பல்வேறு பொருட்களின் விலை ஏறுவதோடு பணவீக்கத்திற்கும் வழிகோலுகிறது.

மத்திய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூ.5 மட்டுமே இருந்தது. அது தற்போது ரூ.20.48ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல 1 லிட்டர் டீசலில் கலால் வரி ரூ.15.83ஆக உயர்ந்துள்ளது. கடந்த 20 மாதங்களில் கலால் வரி உயர்வு மூலம்  ரூபாய் 1 லட்சத்து 48 ஆயிரத்து 977 கோடி, நரேந்திர மோடி அரசு வருமானத்தை  பெருக்கி கஜானாவை நிரப்பிக்கொண்டுள்ளது. இந்த வருமானத்தின் மூலமாகத்தான் நிதிப்பற்றாக்குறை சரிசெய்யப்பட்டுவருகிறது. நியாயமாக மக்களுக்கு போய்ச் சேரவேண்டிய பயன்களை அபகரிக்கிற நரேந்திர மோடி அரசு மக்கள் நலன் சார்ந்த அரசா? மக்கள் விரோத அரசா?

மனம் திறந்து பேசுகிறேன் என்று மார்தட்டி முழங்கி வருகிற நரேந்திர மோடி அரசு வசதி உள்ளவர்கள் பயன்படுத்துகிற விமானப் போக்குவரத்திற்கு 1 லிட்டர் பெட்ரோல் ரூ.40 மானிய விலையில் வழங்குகிறது. ஆனால், வாக்களித்த மக்களுக்கு வழங்குகிற பெட்ரோல் ரூ.60க்கும் மேலாக உயர்த்துவது நியாயமா? நரேந்திர மோடியின் மனசாட்சி இதற்கு பதில் கூறுமா? கடந்த 20 மாதங்களில் பல்வேறு நிலைகளில் மக்கள் சோதனைகளை சந்தித்து பா.ஜ.க. ஆட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பு உருவாகி மத்திய பா.ஜ.க. அரசு செல்வாக்கு இழக்கிற நிலை இன்றைக்கு உருவாகி வருகிறது. இதற்கு நாட்டுமக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *