தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 05.10.2016
விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் திரு.பி.கே.தெய்வசிகாமணி மற்றும் நிர்வாகிகள் இன்று நண்பகல் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்து காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் நலன்காக்க அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நாளை (6.10.2016) வியாழக்கிழமை சென்னை எழும்பூரில் காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அவர்களின் அழைப்பினை ஏற்று இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சா.பீட்டர் அல்போன்ஸ் அவர்களும், தமிழ்நாடு காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் திரு. எஸ்.பவன்குமார் அவர்களும் பங்கேற்பார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

14445927_572057176314745_5022545548148179323_n 14570554_572057179648078_3298955663800277381_o statement-05-10-2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *