தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 09.11.2016

maxresdefault
புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்திருப்பது நாடு முழுவதும் ஒரு தரப்பினரிடையே வரவேற்பும் பெரும்பாலானவர்களிடையே அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருக்கிறது. கருப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் ஒழிக்க வேண்டும்; என்கிற மத்திய அரசின் முயற்சியை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. உண்மையிலேயே பிரதமரின் அறிவிப்பு கருப்பு பணத்தை ஒழிக்கப் போகிறதா ? அல்லது ஏழை எளிய மக்களை பாதிக்கப் போகிறதா ? என்ற கேள்வி இன்றைக்கு எழுந்துள்ளது.
பிரதமரின் அறிவிப்பு வெளிவந்ததும் மக்கள் அச்சம் கொண்டு தாங்கள் உழைத்து சம்பாதித்த பணம் செல்லாததாக ஆகிவிடுமோ என்கிற பதற்றத்தில் மக்கள் இருப்பதை காண முடிகிறது. தற்போது நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூபாய் 16 லட்சத்து 42 ஆயிரம் கோடி. இதில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஏறத்தாழ 80 சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. இதனுடைய மதிப்பு 15 லட்சம் கோடி ரூபாய். இந்த தொகையை மாற்றி புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து வழங்குகிற பகீரத முயற்சிக்கு ரூபாய் 20 ஆயிரம் கோடி செலவு செய்ய மத்திய பா.ஜ.க. அரசு முனைந்திருக்கிறது.
நாள்தோறும் உழைத்து சம்பாதிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கக் கூடிய வகையில் பிரதமரின் அறிவிப்பு அமைந்துள்ளது. சாதாரண ஏழைஎளிய மக்கள் தங்களிடமுள்ள ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலோ, அஞ்சல் நிலையங்களிலோ எவ்வித சிரமமின்றி மாற்றிக் கொள்வதற்கு எளிய நடைமுறையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதற்கு மாறாக வருமான வரித் துறையினரின் பிடியில் சாதாரண ஏழை எளிய மக்களை சிக்க வைத்து அலைக்கழிக்கிற முயற்சியில் பா.ஜ.க. அரசு ஈடுபடக்கூடாது.
இந்தியாவில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 87 லட்சம் பேர். இதில் கணக்கு மட்டும் காட்டி, வருமான வரி விதிக்கப்படாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 62 லட்சம். ஆக, நமது நாட்டில் வருமான வரி கட்டுபவர்கள் 1 கோடியே 25 லட்சம் பேர். மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒரு சதவீதத்தினர் தான் நமது நாட்டில் வருமான வரி கட்டுகிறார்கள். இந்தப் பின்னணியில் நாட்டு மக்களை வருமான வரி கட்டுவதற்காக நிர்ப்பந்திக்கிற வகையில் பிரதமரின் அறிவிப்பு அமையுமேயானால் அதைவிட மக்களை சிரமப்படுத்துகிற நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது.
ஆனால், வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றுகிறபோது வரி விலக்கு கிடையாது, அந்த பணத்திற்கான ஆதாரம் என்னவென்பதைப் பொறுத்து நாட்டின் வரிவிதிப்பு சட்டங்களுக்கு ஏற்ப வரி விதிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் கூறியிருப்பது சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய நடவடிக்கையாகும். அளவுக்கு அதிகமாக கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களை வருமான வரி வளையத்திற்குள் கொண்டு வருவது தவறில்லை.
 சாதாரண மக்கள் இன்று வங்கிகளில் தங்களது பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு அலை மோதிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்துபவர்கள் வருமான வரி சட்டத்தின்படி நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்; இதில் எவராவது தவறுதலாக செயல்பட்டால் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய நிதித்துறை செயலாளர் அறிவித்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற நடவடிக்கையாகும். இத்தகைய நடவடிக்கைகளினால் மக்கள் பாதுகாப்பற்ற தன்மையில் இருப்பது குறித்து உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்துவதற்கு பழைய ரூபாய் நோட்டுக்களை பெற மின்சாரம் வாரியம் தயாராக இல்லை. சிறிய அளவிலான தொகையினை செலுத்துவதை பெற்றுக் கொள்வதற்கு மாநில அரசு உரிய ஏற்பாடுகளை மத்திய அரசோடு கலந்து செய்ய வேண்டும்.
நமது நாட்டில் ஏழை எளியோரிடம் மிகச் சிறிய அளவிலுள்ள ரூபாய் நோட்டுக்களை அடையாள அட்டை, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை கேட்டு நிர்பந்திக்காமல் எளிதில் பணமாற்றம் செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *