கரூரில் நேற்று 10.01.2016 காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர கமிட்டி தலைவர் சுப்பன் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பேசியதாவது:

ஆட்சியாளர்கள் சுரண்டல் சொத்து சேர்ப்பதைத்தான் செய்கின்றனர். மக்கள் இதை உணரஆரம்பித்து விட்டனர். அவர்கள் தீயசக்திகளிடம் இருந்து தமிழகத்தை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்கள் மீது அக்கறையில்லை. சொத்து சேர்ப்பதில்தான் அக்கறை. ஏழை எளியவர்களின் வாழ்க்கை பற்றி சிறிதும் அக்கறை கிடையாது. வெள்ள நிவாரண பணிகளில் தொண்டு நிறுவனத்தினர், இளைஞர்கள், மசூதிகள்,தேவாலயங்களை சேர்ந்தவர்கள் உதவினர்,. ஆனால் அரசு எதையும் செய்யவில்லை. ஆறுதல்கூட சொல்லவில்லை. இது கேவலம். யானைகள் மீது உள்ள அக்கறை கூட மனிதர்கள்மீது இல்லை. வேனில் இருந்து இறங்கிவந்துகூட முதல்வர் ஆறுதல் கூறவில்லை.

கும்பகோணத்தில் மகாமகம் வருவதால் மக்கள்அச்சத்துடன் உள்ளனர். ஏற்கனவே இவரும் தோழியும் நீராட சென்று 100க்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் இறந்தனர். இவர் வந்தாலே பாவம் என நினைக்கின்றனர். இவராக ராஜினாமா செய்வது நல்லது. இல்லாவிட்டால் மக்கள் கழுத்தைப் பிடித்து தள்ளிவிடுவார்கள். அம்மா என்கிறார்கள்.

தாய்மனம் வெள்ள சேதத்தின்போது பதைத்திருக்க வேண்டாமா?. எம்ஜிஆர் சமாதிக்கு எப்படி நடந்து போனார். தேர்தல் வந்தாலே இவருக்கு எம்ஜிஆர் மீது காதல் வந்துவிடும். அம்மா உப்பு, உணவகம், என்கிறார்கள். வீதிக்கு வீதி டாஸ்மாக் கடையை திறந்து வைத்துள்ளனர். அம்மா சாராயக்கடை என வைக்க வேண்டியது தானே. ராகுல்காந்தி, நல்லக்கண்ணு, 92 வயது கருணாநிதி என தலைவர்கள் எல்லாம் வெள்ளசேதத்தை போய்பார்த்து ஆறுதல் கூறினார்கள். ஆனால் நாடாளுபவர்கள் காரை விட்டு இறங்கவில்லை. மக்களுக்கு உணவளிக்காமல் கட்சிபொதுக் குழுவில் மீன்,எறா, மட்டன், கோழி போடுகின்றனர்.

கொடநாடு, சிறுதாவூர், போயஸ் என பங்களாக்கள். ஐதராபாத் திராட்சைதோட்டம், இத்தனையும் ஏன். மக்களை எப்போதும் ஏமாற்ற முடியாது. காமராஜர் போன்ற தலைவர்கள் சுதந்திரத்திற்காக, மக்களுக்காக சிறை சென்றனர். இவரும் சிறை சென்றார். ஆனால் அது வேறு செக்ஷன். உடனடியாக பதவி விலகுவதுதான் நல்ல காரியம். பொங்கலுக்கு 2அடி கரும்பு கொடுக்கிறார்களாம். இதைவிட அல்வா கொடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். மக்களை மடையர்கள் என நினைத்தால் என்ன ஆகும். பொறுமையாக இருப்பவர்கள் அதை மீறினால் காணாமல் போய் விடுவீர்கள். காசு கொடுக்காமல் இந்த ஆட்சியில் எந்த வேலையும் நடக்காது. அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ளேன். கரூரில் செந்தில்பாலாஜி பதவி பறிப்புக்கு என்னகாரணம். தவறு செய்ததால் அல்ல. பங்கை சரியாக கொடுக்காததுதான். பட்டியலில் எதையாவது மறுத்திருக்க வேண்டியதுதானே. தைரியம் இருந்தால் வழக்கு போடுங்கள். மக்கள் அமைதியாக இருப்பதால் மறந்து விடுவார்கள் என நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.

பிரதமர்மோடி உலகம் சுற்றும் கிழவர். எல்லா நாடுகளையும் சுற்றிய பின்னர் அவரை சந்திரனுக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். உலக அரங்கில் இந்தியாவின் பெருமை குறைய ஆரம்பித்துவிட்டது. பிறமதத்தினர் தாக்கப்படும்போது வாய்திறப்பதில்லை. அவரது ஜால்ராக்கள் தான் தூண்டி விடுகின்றனர். வழக்கு போட்ட பின் சோனியா, ராகுல் செல்வாக்கு பெருகி வருகிறது. கரூரில் தொழில்கள் நசிந்து வருகிறது.

வருங்காலத்தில் 500க்கும்,1000திற்கும் ஆசைப்பட்டால் 5 வருடம் அவஸ்தைப்பட வேண்டியதுதான். காங்கிரஸ்ஆட்சி அல்லது துணையோடு ஆட்சி அமைந்தால் மதுவிலக்கு, லஞ்சம் ஒழிப்பவர்களோடுதான் உறவு இருக்கும். சுயமரியாதையோடு எங்களை நடத்துபவர்களுக்கு ஆதரவு. இல்லாவிட்டால் நாங்கள் நேரடியாக மக்களோடு கைகுலுக்குவோம். இந்த வாய்ப்பினை மக்கள் நழுவவிட்டு விடக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.

0001a 0002 0003 0004


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *