தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Picture1பன்னெடுங்காலமாக தமிழ் ஆண்டுகள் என நாம் கொண்டாடி வரும் 60 ஆண்டுகளில் 30 ஆவது ஆண்டாக தற்போது துன்முகி ஆண்டு பிறக்கிறது. துன்முகி ஆண்டில் நாட்டைப் பிடித்திருந்த துன்பங்கள் அகன்று நாட்டு மக்களுக்கு நன்மைகள் தரும் ஆண்டாக மலர்ந்திடும் என நம்பிக்கை கொள்வோம். இயற்கை சீற்றத்தால் இன்னல் கொடுத்த ஆண்டும் மாறி, ஆண்டு கொண்டிருக்கும் ஆட்சியும் மாறி மக்கள் மனங்களில் இத்தமிழ்ப் புத்தாண்டு மகிழ்ச்சியை விதைக்கட்டும்.

துன்முகி ஆண்டில் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் ஒருதாய் மக்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்திடவும், பழையன கழிந்து புதியன தோன்றி புத்தெழுச்சி உருவாகிடவும், மனித நேயமும், மத நல்லிணக்கமும் மனித மனங்களில் நிறைந்து, மகிழ்ச்சி பொங்க வாழ்ந்திடவும் உளநிறைவுடன் வாழ்த்தி புத்தாண்டை வரவேற்போம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *