பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததின விழா

தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்திய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 114 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் திரு.ஜி.சின்னா ரெட்டி, திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி, MLA ஆகியோர் முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.

இதில் அலங்கரித்து வைக்கப்பபட்ட பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு திரு.ஜி.சின்னாரெட்டி, திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு.கே.ஆர்.ராமசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

13731794_538045286382601_8104642507620472879_o 13734876_538045293049267_787472519569223815_o 13738297_538045289715934_689859656350748568_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *