தமிழக மக்களால் நடமாடும் பல்கலைக் கழகம் என்று போற்றி அழைக்கப்பட்ட திராவிட இயக்கங்களின் முன்னணித் தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சருமான நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களது துணைவியார் திருமதி. விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
தமிழக அரசின் மருத்துவத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் பொது வாழ்க்கையில் தம்மை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர். தமது வாழ்க்கையின் இறுதிவரை பொது வாழ்க்கையில் சிறப்பாக பணியாற்றிய திருமதி. விசாலாட்சி நெடுஞ்செழியன் அவர்களின் மறைவிற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது மறைவால் வாடும் மகன் மற்றும் குடும்பத்தினருக்கும், கட்சி தோழர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *