Monthly Archives: March 2015

கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம்

கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம்

மார்ச் 29, 2015 அன்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம், அனைத்து ஊடகவியலாளர் சங்கங்கள் இனைந்து கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டனக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கண்டன கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். திமுக பொருளாளர் திரு. மு.க. ஸ்டாலின், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் திரு.ஜி. ராமகிருஷ்ணன், பத்திரிக்கையாளர் திரு. இந்து என். ராம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

பிஜேபியின் நில அபகரிப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்

பிஜேபியின் நில அபகரிப்புச் சட்டத்தை எதிர்த்து போராட்டம்

மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள நில அபகரிப்புச் சட்டம் விவசாயிகளின் அடிப்படை உரிமையை பாதிப்பதாகும். இது தொழில் அதிபர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விவசாய விரோத சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் கலந்துக் கொண்டார்.

மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுக்கூட்டம்

மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுக்கூட்டம்

மக்கள் விரோத மத்திய பிஜேபி மற்றும் மாநில அதிமுக ஆட்சிகளை எதிர்த்து மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில்  22.2.2015 அன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் 90வது பிறந்த நாள் விழா

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் 90வது பிறந்த நாள் விழா

சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத் அவர்களின் 90வது பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல்.திருமாவளன் அவர்கள், திரு.கே.சுப்பராயன் அவர்கள், திரு.ஜி.மாசிலாமணி அவர்கள், திரு.பசுபதி தனராஜ் அவர்கள், கவிஞர் இளவேனில் அவர்கள், திரு.எம்.பி.திருஞானம் அவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.