Monthly Archives: December 2015

மிலாது நபி திருநாள் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 23.12.2015

மிலாது நபி திருநாள் : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 23.12.2015

மக்களிடையே சகோதர உணர்வு, சமூக சீர்திருத்தம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை நிலைநாட்டி உண்மையின் மறுவடிவமாக விளங்கிய நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாள் விழாவை உலகத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற நாளாகும். தமக்கு துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு கொண்ட மனித சமுதாயம் உருவாக வேண்டும் என்கிற  நோக்கத்திற்காக வாழ்ந்தவர் நபிகள் நாயகம் அவர்கள். உலகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் பயங்கரவாத தாக்குதல் என்கிற போர்வையில் உலக வல்லரசுகளால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் […]

தமிழக கரும்பு விவசாயிகளின் இன்னலைப் போக்குகிற வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1,500 கோடி நிலுவைத் தொகை மற்றும் 2015-16 ஆண்டுக்கான கரும்பு விலை நிர்ணயம் செய்யாமல் இருப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாய சங்கங்கள் நடத்துகிற போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண கரும்பு விவசாயிகள், கரும்பு ஆலைகள், தமிழக அரசு அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 23.12.2015  இந்தியாவிலேயே சர்க்கரை உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்த தமிழகம் மத்திய – மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளின் காரணமாக கரும்பு விவசாயமே அழிந்து விடுகிற அவலநிலை ஏற்பட்டுள்ளது. 2011-12 இல் 3.35 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்த நிலையிலிருந்து 2014-15 இல் 2.55 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. அதேபோல சர்க்கரை உற்பத்தி 24.43 லட்சம் டன்னிலிருந்து 13 லட்சம் […]

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த (22, 29-11-2015) உள்ளாட்சித் தேர்தல்களில், குஜராத் மாநிலம் முழுவதும், காங்கிரஸ் கட்சி அமோக எழுச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இதை மிகவும் தெளிவாக உணர முடிகிறது.

தனிப்பட்ட முறையில் தமிழிசை சௌந்தரராஜனுடைய அரசியல் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததோடு, அவர்மீது அன்பையும், பாசத்தையும் வைத்திருக்கிறேன். நான் பேசிய ஒப்பீட்டை தவறாக புரிந்து கொண்டார்

தனிப்பட்ட முறையில் தமிழிசை சௌந்தரராஜனுடைய அரசியல் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததோடு, அவர்மீது அன்பையும், பாசத்தையும் வைத்திருக்கிறேன். நான் பேசிய ஒப்பீட்டை தவறாக புரிந்து கொண்டார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 22.12.2015 தமிழக பா.ஜ.க.வின் தலைமைப் பொறுப்பை வகிக்கின்ற டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் எதற்கெடுத்தாலும் காங்கிரஸ் இயக்கத்தின் மீதும், அன்னை சோனியா காந்தி மீதும் பழிபோட்டு பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். மத்திய பா.ஜ.க. அரசு மீது விமர்சிக்கின்ற போதெல்லாம் அதற்குரிய பதிலை சொல்லாமல் காங்கிரஸ் தலைவர்களை வசைப்பாடுவது குறித்து பலமுறை விமர்சனம் செய்திருக்கிறோம். சமீபத்தில்  மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது ஒரே விஷயத்தை  […]

கடும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களுக்கான கடனை மறுசீரமைப்பு செய்வதோடு, வட்டியை முற்றிலும் தள்ளுபடி செய்து, திரும்பவும் தொழில் தொடர்ந்து நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ‘மேக் இன் இந்தியா” என்கிற முழக்கத்தை முன்வைக்கிற நரேந்திர மோடி அரசு சிறு, குறு தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 21.12.2015 தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு பல்வேறு துன்பங்களுக்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள். அதைப்போல தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலும் இயல்புக்கு மாறாக கடும் மழை பெய்த காரணத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வரலாறு காணாத பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தென்மாவட்டங்களில் […]

மீனவர்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய மற்றும் மாநில அரசுகள்

மீனவர்களை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய மற்றும் மாநில அரசுகள்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அமைச்சரவையில் மீனவர் நலத்துறை என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என ராமேஸ்வரத்தில் கடல்தாமரை மாநாட்டை பா.ஜ.க.வினர் நடத்தியபோது இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வாக்குறுதியளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகியும் தனி அமைச்சகமும் உருவாக்கப்படாத நிலையில் மீனவர் பிரச்சனை மேலும் மேலும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. சில காலத்திற்கு முன் ‘ சர்வதேச கடல் எல்லையை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 17.12.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 17.12.2015

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களின் குரலாக ஒலிக்க ஜவஹர்லால் நேரு அவர்களால் 1938 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிகைநிறுவனத்தின் மீது பொய் வழக்கு போட்டு காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்திவிடாலம் என பாரதிய ஜனதா கட்சி சதித் திட்டம் தீட்டி, சுப்பிரமணிய சுவாமியை தூண்டி விட்டுபழிவாங்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதை கண்டிக்கும் வகையில் வருகிற டிசம்பர் 19 அன்று வெள்ளத்தால் பாதிக்கப்படாத கீழ்க்கண்ட மாவட்டங்களில்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நடத்த […]

மத்திய பா.ஜ.க. அரசு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுத்தி வரும் பழிவாங்கும் போக்கை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துகிற வகையில் வருகிற 19.12.2015 சனிக்கிழமை அன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நடத்த வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் மக்களை திரட்டுவதற்காக ஜவஹர்லால் நேரு அவர்கள் 1938 இல் ‘நேஷனல் ஹெரால்ட்” என்கிற ஆங்கில நாளேட்டோடு இந்தியிலும், உருதுவிலும் பத்திரிகைகளை வெளியிட்டார். அன்றைய பத்திரிகைகள் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஊதுகுழலாக இருந்ததால் காங்கிரஸ் கட்சியின் குரலாக ஒலிக்க இந்த பத்திரிகைகளை தொடங்க வேண்டிய அவசியம் ஜவஹர்லால் நேருவுக்கு ஏற்பட்டது. இந்த பத்திரிகையை நிர்வாகம் செய்வதற்காக அசோசியேடட் […]

‘நேஷனல் ஹெரால்டு வழக்கு’ இதுபற்றி அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளும், அவைகளுக்குரிய பதில்களும்

‘நேஷனல் ஹெரால்டு வழக்கு’ இதுபற்றி அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளும், அவைகளுக்குரிய பதில்களும்

1. கேள்வி: ‘யங் இந்தியா’ அமைப்பிலிருந்து திருமதி சோனியா காந்தியோ அல்லது ராகுல்காந்தியோ ஏதாவது ஆதாயம் பெற்று வந்தனரா? பதில்: இல்லவே இல்லை! லாபநோக்கில்லாத, 25வது பிரிவின்படி துவக்கப்பட்ட யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்களோ, பங்குதாரர்களோ, எந்த விதமான நிதி ஆதாயங்களையும் பெற்றிடக்கூடாது என்று சட்டப்படி தடை இருக்கிறது. எனவே சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் இதனால் எந்த விதமான நிதி ஆதாயங்களை பெற்றிடும் வாய்ப்புகளே இல்லை. 2. கேள்வி: ஏதாவது சொத்துக்கள், ‘அசோசியேடட் ஜர்னல் லிமிடெட்’ (அசோசியேடட் […]

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற முயற்சி தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் கண்டனம்

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற முயற்சி தலைமைச் செயலாளருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் கண்டனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 14.12.2015 கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 1131 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த கடும் மழை காரணமாக நவம்பர் 17 ஆம் தேதி 18,000 கனஅடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டது. நவம்பர் 23-க்குப் பிறகு 29 ஆம் தேதி வரை 1 சொட்டு மழை கூட பெய்யவில்லை.  இக்காலத்தில் தமிழக […]