Monthly Archives: December 2015

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு அஞ்சலி-06.12.2015

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு அஞ்சலி-06.12.2015

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நினைவு நாளான இன்று (6.12.2015) சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைமையில் திரு.சு.திருநாவுக்கரசர், திருமதி.குஷ்பு சுந்தர், திரு.கு.செல்வ பெருந்தகை, திரு.ராயபுரம் மனோ, திரு.என்.ரங்கபாஷ்யம், ஆகியோர் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-05.12.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை-05.12.2015

கடந்த நவம்பர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை, 32 நாள்களில் மழை பெய்த காரணத்தால் சென்னை மாநகரமே தண்ணீரில் மிதக்கிற கொடுமை நிகழ்ந்துள்ளது. சென்னை மாநகரில் ஏற்பட்ட பாதிப்புக்கு மழைநீர் மட்டும் காரணமல்ல. அதற்குமாறாக சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்குகிற செம்பரம்பாக்கம்,பூண்டி, சோழவரம், செங்குன்றம் ஆகிய ஏரிகளில் இருந்து எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென நவம்பர் 15 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 2 ஆம் தேதி ஆகிய நாள்களில் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி – 2.12.2015

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி – 2.12.2015

செட்டிநாடு குழும நிறுவனங்களின் தலைவராக திரு.எம்.ஏ.எம்.ராமசாமி அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிக துயரம் அடைந்தேன். கல்வி, இசை என பல்வேறு துறைகளில் அளப்பறிய பங்காற்றிய ராஜா சர்.அண்ணாமலை செட்டியார், ராஜா சர்.முத்தையா செட்டியார் ஆகியோரின் பாரம்பரியத்தில் வந்த திரு எம்.ஏ.எம்.ராமசாமி அவர்கள் தனது குடும்பத்தின் பெருமையை தொடர்ந்து காக்கும் வகையில் பல்வேறு சமூக பணிகளை செய்தவர். பின்தங்கிய சமுதாய மக்களுக்கு நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வந்த கல்வியை பெறும் வகையில் சிதம்பரத்தில் நிறுவப்பட்டது தான் அண்ணாமலை […]

கருத்தரங்கம் – திப்பு சுல்தானும் மத நல்லிணக்கமும்

கருத்தரங்கம் – திப்பு சுல்தானும் மத நல்லிணக்கமும்

நாள்: 04.12.2015 வெள்ளி மாலை 4 மணி இடம்: சத்தியமூர்த்தி பவன், சென்னை தலைமை: திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்புரை: திரு.கு.செல்வப் பெருந்தகை முன்னிலை: திரு.ஜெ.எம்.ஆரூண் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்: திரு.இராயபுரம் ஆர்.மனோ, திரு.கராத்தே ஆர்.தியாகராஜன், திரு.என்.ரங்கபாஷ்யம், திரு.வி.ஆர்.சிவராமன், திரு.பூவை.ஜேம்ஸ், திரு.ஏ.ஜி.சிதம்பரம், திரு.ஆர்.சுந்தரமூர்த்தி கருத்துரை: பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திரு.எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர் திரு.ஞாநி, எழுத்தாளர், அரசியல் விமர்சகர் எஸ்.எம்.இதயதுல்லா எழுதிய இந்து சமயமும், திப்பு சுல்தானும் எனும் நூல் வெளியிடப்படும். […]