Monthly Archives: March 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் மீது அளவற்ற பற்றும், மதிப்பும் வைத்திருக்கிற பெருந்தகையாளர்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு இடங்களில் நன்கொடையாக சொத்துக்களை எழுதி வைத்துள்ளனர். அதேபோல காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சிக்காக ஆங்காங்கே சில இடங்களில் உள்ளூர் காங்கிரஸ் அறக்கட்டளையின் பேரில் சொத்துக்களை விலைக்கு வாங்கி உள்ளனர். இந்த சொத்துக்கள் தவறான நிர்வாகத்தின் காரணமாக பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு, சிலர் அனுபவித்து வருகிறார்கள். சில இடங்களில் காங்கிரஸ் கட்சியின் சொத்துக்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளன.இத்தகைய […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு சில ஆண்டுகாலமாக வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகி, மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது. தமிழக ஆட்சியாளர்களுக்கு தொலைநோக்குத் திட்டம் 2023 என்கிற ஆவனத்தை வெளியிட முடிந்ததே தவிர, அந்த இலக்கை அடைவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி தடைப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிற நிதிநிலை அறிக்கைகள் தற்காலிகமாக நிலைமையை சமாளிக்கிற நிலையில் இருக்கிறதேயொழிய தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை. தமிழக அரசின் பொருளாதார நிலை ஆண்டுக்கு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் 24.3.2017 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் இன்று (24.3.2017) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். Posted by Tamilnadu Congress Committee on Friday, March 24, 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி.

தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான திரு.அசோகமித்திரன் அவர்களது மறைவு தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல்வேறு படைப்புகளை படைத்து சாதனை படைத்தவர். சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். தமது எழுத்துக்கள் மூலம் தமிழை வளர்த்த திரு.அசோகமித்திரன் அவர்களது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், எழுத்துலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

இந்தியாவிலேயே சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலிருந்த தமிழகம் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் மத்திய – மாநில அரசுகளின் தவறான கொள்கை தான். தமிழக கரும்பு விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கரும்புக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தினால் சாகுபடி பரப்பு குறைந்து உற்பத்தி சரிந்து வருகிறது. தமிழகத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்பிற்கு 24 தனியார் சர்க்கரை ஆலைகள் மாநில அரசு அறிவித்த விலையை கடந்த 4 ஆண்டுகளாக தரவில்லை. இதன்மூலமாக விவசாயிகளுக்கு தர […]

புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாரம்பரிய நெல் விதையை மீட்டெடுத்து இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து வரும் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி திரு. நெல் ஜெயராமன் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து, அவரது மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தன் ஒப்பற்ற நடிப்புத் திறனால் தமிழ்ப் பெருமக்களின் அன்பிற்குரியவராக திகழும் உலக நாயகன் நடிகர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சகோதரர் திரு.சந்திரஹாசன் அவர்கள் லண்டனில் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன். அன்னாரின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும் என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் குறிப்பாக நடிகர் திரு.கமல்ஹாசன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கே.ஆர். ராமசாமி அவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 20.3.2017 மாலை 6 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடை பெற்றது

தமிழகத்தில் முதல் மதுவிலக்கை கொண்டு வந்த மூதறிஞர் ராஜாஜியின் பிறந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், தொரப்பள்ளியை நோக்கி காந்தி பேரவை தலைவர் திரு.குமரி ஆனந்தன் அவர்கள் தலைமையில் 19.3.2017 ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கிலிருந்து 25 தொண்டர்களுடன் 24 நாட்கள் பூரண மதுவிலக்கு வேண்டி நடைபயணம் மேற்கொள்டார். காந்திய வழியில் நடைபெறும் இந்த நடை பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் தொடங்கிவைத்தார் இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், காந்திய அமைப்பைச் சார்ந்தவர்கள், முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்

191