Monthly Archives: May 2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

  தமிழக காங்கிரசின் முன்னணித் தலைவரும், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான திருமதி.டி.யசோதா அவர்களின் சகோதரர் திரு.டி.எஸ்.முத்து அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். திரு.டி.எஸ்.முத்து அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரை இழந்து வாடும் அவரது சகோதரி திருமதி.டி.யசோதா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

உலக சமாதானத்தின் தூதுவராகவும், இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலராகவும், மதச்சார்பற்ற, வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உலாவந்த மாபெரும் தலைவர் ராஜீவ்காந்தியை ராமானுஜர் பிறந்த இதே புனித மண்ணில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வந்தபோது நம்மிடமிருந்து நாச சக்திகளால் பறிக்கப்பட்ட நாள் மே 21. அமைதிப் பூங்காவான தமிழகத்தில் ராஜீவ்காந்தி படுகொலை திட்டத்தை அரங்கேற்றிய தேசவிரோத, பயங்கரவாத சக்திகளின் முகமூடி கிழித்தெறியப்பட்டு, உண்மை உலகிற்கு தெரிந்துவிட்டது. பயங்கரவாதத்திற்கு பலியான நமது அன்புத் தலைவர் ராஜீவ்காந்தியின் நினைவுநாளில் ஸ்ரீபெரும்புதூர் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழக சட்டமன்றம் நீண்டகாலமாக தமிழக சட்டமன்றம் பின்பற்றி வந்த சட்டரீதியான நடைமுறைகள், மரபுகள் அ.தி.மு.க. ஆட்சியினரால் உதாசீனப்படுத்துகிற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படுகிற நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் பொது விவாதங்களும், மானிய கோரிக்கைகள் மீதான வாக்கெடுப்பும் அவையில் நடைபெற வேண்டுமென சட்டமன்ற விதி கூறுகிறது. அதன்படி 15 ஆவது தமிழக சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் தமிழக அரசால் இறுதி செய்யப்பட்டது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். நிதிநிலை அறிக்கை மீதான […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான திரு. ப. சிதம்பரம் மற்றும் அவரது மகன் ஆகியோர் வீட்டிலும், அலுவலகத்திலும் மத்திய புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க. அரசை தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையாக திரு. ப. சிதம்பரம் விமர்சித்து வந்ததை சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவரை அச்சுறுத்துவதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக கருதுகிறேன். இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

சமீபகாலமாக தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு பல்வேறு பணிகள் தேங்கிக் கிடப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர்கள் 7 முக்கிய கோரிக்கைகள் குறித்து தமிழக அரசோடு 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் பேருந்துகள் சேவை திடீரென நிறுத்தப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுமக்கள் அதிகளவில் பேருந்தை பயன்படுத்தி […]

காங்கிரஸ் அமைப்புத் தேர்தல்களுக்கான மாநில தேர்தல் அதிகாரி திரு.கே.பாபிராஜூ , Ex.MP அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்தார்.

காங்கிரஸ் அமைப்புத் தேர்தல்களுக்கான மாநில தேர்தல் அதிகாரி திரு.கே.பாபிராஜூ , Ex.MP அவர்கள் சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களை சந்தித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

ராம்கோ குழுமங்களின் தலைவரும், ராஜபாளையம் தொழில் வர்த்தகர் சங்கத்தின் தலைவருமான திரு. பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கல்வி நிறுவனங்கள், சிமெண்ட் தொழிற்சாலை, நூற்பாலைகள், கூரை தகர ஆலைகள் நடத்தி தொழில் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு இவரது தந்தை திரு. ராமசாமி ராஜா நெருக்கமான நண்பராக திகழ்ந்தவர். இவரது தந்தை மற்றும் திரு. ராமசுப்பிரமணிய ராஜா ஆகியோரின் அயராத உழைப்பால் விருதுநகர் மற்றும் ராஜபாளையத்தில் […]

சென்னை தண்டையார்பேட்டை, இரட்டைக்குழி தெருவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களிடம் அமைப்பாளர் திரு. கு. செல்வப்பெருந்தகை முன்னிலையில் திரு. உ. பலராமன் அவர்களுடைய குழுவைச் சார்ந்த திரு. சாமிநாதன், திரு. மாரியப்பன் ஆகியோர் மேற்கண்ட சொத்தை இன்று நன்பகல் 12 மணியளவில் ஒப்படைத்தனர்.

சென்னை தண்டையார்பேட்டை, இரட்டைக்குழி தெருவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான கட்டிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களிடம் அமைப்பாளர் திரு. கு. செல்வப்பெருந்தகை முன்னிலையில் திரு. உ. பலராமன் அவர்களுடைய குழுவைச் சார்ந்த திரு. சாமிநாதன், திரு. மாரியப்பன் ஆகியோர் மேற்கண்ட சொத்தை இன்று நன்பகல் 12 மணியளவில் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் திரு. மா. முத்துசாமி, வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. இரா. மனோகர், சொத்து மீட்புக்குழு […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன். ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்;டருக்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டுமென்று உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளுக்கு பதில் குடியிருப்பு பகுதிகளில் மாற்று கடைகள் அமைக்க அரசு முயற்சிப்பதை எதிர்த்து திருப்பூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் […]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 08.05.2017

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 08.05.2017

மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 85 ஆயிரம் மாணவ-மாணவியர்கள் 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 6510 இடங்களுக்காக இத்தேர்வில் பங்கேற்றுள்ளனர். இத்தேர்வில் பங்கேற்ற மாணவ – மாணவியர்கள் கடுமையான பரிசோதனைக்குப் பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிரவாதிகளை பரிசோதனை செய்வதைப் போல தலை முதல் கால் வரை சோதனை நடத்தியுள்ளனர். மாணவிகள் அணிந்திருந்த […]