இரங்கல் செய்தி – 21.10.2016
இரங்கல் செய்தி:
திரு. பசுமலை ரவி மறைவு :
மதுரை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு.பசுமலை ரவி அவர்கள் மாரடைப்பால் அகால மரணமடைந்தார் எனும் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் மற்றும் பல்வேறு பொறுப்புக்களில் இருந்தும் காங்கிரஸ் பேரியக்கம் வளர தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டவர் திரு.பசுமலை ரவி. இவர் பழகுவதற்கு இனிமையானவர், அன்பும் பண்பும் நிறைந்தவர். அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பெரும் இழப்பாகும்.
அன்னாரின் மறைவிற்கு எனது ஆழந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுககும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. காஞ்சி சுகுமார் மறைவு :
காங்கிரஸ் பேரியக்கத்தின் பேச்சாளரும், வடசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவருமான திரு. காஞ்சி சுகுமார் அவர்கள் அகால மரணமடைந்தார் எனும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
காங்கிரஸ் பேரியக்கம் வளர தமிழகம் முழுவதும் சென்று காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கைகளை பரப்பியவர். காங்கிரஸ் பேரியக்திற்காக தன்னை அர்பனித்துக் கொண்டு பாடுபட்டவர் திரு. காஞ்சி சுகுமார். இவர் பழகுவதற்கு இனிமையானவர், அன்பும், பண்பும் நிறைந்தவர். அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பெரும் இழப்பாகும்.
அன்னாரின் மறைவிற்கு எனது ஆழந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுககும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *