குடியரசு தினம் :

Picture1தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும்  வாழ்த்துச் செய்தி

இந்தியா குடியரசாக 1950 இல் பிரகடனப்படுத்தப்பட்டு 65 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. உலக அரங்கில் அரசியல், பொருளாதார ரீதியாக இந்தியா வல்லரசாக வளர்ந்துள்ளதை எவரும் மறுக்க இயலாது. 120 கோடி மக்களைக் கொண்ட உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற பெருமையும்,  16 நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தி, ஜனநாயகத்தை செழுமைப்படுத்திய வரலாறும் இந்தியாவுக்கு உண்டு.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு எந்த லட்சியத்திற்காக இந்திய குடியரசு உருவாக்கப்பட்டதோ, அதனுடைய அடிப்படைத் தன்மையை சிதைக்கிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மையினரை தூண்டிவிடுகிற நடவடிக்கைகளை மதவாத சக்திகள் நாடு முழுவதும் செய்து வருகின்றன. இத்தகைய செயல்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கிற வகையில் அமைந்திருப்பது குறித்து எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது.

மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வருகிற மக்கள் விரோத ஆட்சிகளுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தி நிலையை அடைந்துள்ளனர். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நம்பிக்கையை சிதைக்கிற வகையில் செயல்பட்டு வருவதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.  வளர்ச்சி என்பது ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். வெறும் இலவசங்கள் மூலம் வளர்ச்சியை உருவாக்க முடியாது. வளர்ச்சி என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை உருவாக்க முனைவதுதான் உண்மையான வளர்ச்சியாக இருக்க முடியும்.

எனவே, எத்தகைய சோதனைகள் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு இந்திய குடியரசு தயாராகவே இருக்கிறது. மதவாத ஊழல் சக்திகளை முற்றிலும் முறியடித்து ஜனநாயக சக்திகள் வெற்றி பெறுவதே குடியரசுதின வாழ்த்துச் செய்தியாக இருக்க முடியும். இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *