Thirunavukkarasar at Kamala Theatre Owner VN Chidambaram Ninaivu Anjali Photos

கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணியைச் சார்ந்த சசிகுமாரின் மரணத்தையொட்டி ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களும், பா.ஜ.க.வைச் சார்ந்தவர்களும் மற்றும் சில சமூக விரோதிகளும் சேர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

வியாபாரிகளின் கடைகளை அடித்து நொறுக்கியும், காவல்துறை வாகனங்களை அடித்தும், தீ வைத்தும், காவலர்கள் மீது கல் எறிந்தும், அதேபோல் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரை தாக்கி பொதுச் சொத்துக்களை அடித்தும், தீ வைத்தும் நாசம் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட அமைப்புகளைச் சார்ந்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதும், பொதுமக்களுக்கு தொல்லை தரும் விதத்தில் கலகம் விளைவித்திருப்பதும் முற்றிலும் சட்டவிரோத, பொது அமைதியை கெடுக்கிற, கண்டனத்திற்குரிய செயலாகும்.

ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் உட்பட்டு பொதுமக்களுக்கு தொல்லைத் தராத விதத்திலும், பொதுச் சொத்துக்கள் மற்றும் அரசு சொத்துக்களை நாசப்படுத்தாத விதத்திலும், பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும் தாக்காமலும், ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்த வேண்டும்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசையும், தமிழக காவல்துறையையும் கேட்டுக் கொள்கிறேன்.

 


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *